உத்தர பிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக ராம்துலார் கோந்த் தேர்வு செய்யப்பட்டார். இவர் மீது கடந்த 2014ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோந்த் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக ராம்துலார் கோந்த் தேர்வு செய்யப்பட்டார். இவர் மீது கடந்த 2014ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க;- #BREAKING: கடவுளே இந்த மாதிரி எந்த தந்தைக்கு நடக்கக்கூடாது.. கண்முன்னே மகள் தலை நசுங்கி துடிதுடித்து பலி.!
சட்டமன்ற உறுப்பினர் என்பதால் இந்த வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோந்த் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையும் படிங்க;- கள்ளக்காதலை கண்டித்த மனைவி.. பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கொலை.. கணவர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
மேலும், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தண்டனை குறித்த விவரம் வெளியாகும். குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். குறைந்தது 7 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் பட்சத்தில் என்பதால் ராம்துலார் எம்எல்ஏ பதவியை இழக்க நேரிடும்.