காவல்துறை பல்வேறு சோதனைகளை மேற்கொண்டாலும், இன்றளவும் கொடிகட்டி பறக்கிறது பாலியல் தொழில்.
பாலியல் சம்பவங்கள் நடைபெறக்கூடிய பியூட்டி பார்லர்கள், மசாஜ் சென்டர்கள், பண்ணை வீடுகளிலும் அதிரடி சோதனைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. காவல்துறை எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும், இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக வண்ணாரப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, தங்கும் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க..2022ம் ஆண்டு முடிய 60 நாட்கள் தான் இருக்கு, ஆனா ? மீண்டும் சுனாமி.. நாஸ்டர்டாமஸ் கணிப்பு பகீர்
undefined
இந்த ரெய்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த பிரகாஷ் , ஏசு என்கிற இருவரையும் போலீசார் கைது செய்தனர். அந்த விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 9 பெண்களை பத்திரமாக போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் விசாரணையில் சென்னையில், வேலைக்கு தேடி வந்ததையும், பிரகாஷ் மற்றும் இயேசு இருவரும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறோம், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறோம் என்று சொன்னதை நம்பி அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்டு இப்படி செய்தோம் என 9 பெண்கள் கூறியுள்ளனர். பின்பு அவர்கள் போலீசார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க..தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கியது.. போலீஸ் பலத்த பாதுகாப்பு !
இதையும் படிங்க..மாணவிகளுக்கு சைக்கிள்.! பெண்களுக்கு ஸ்கூட்டி.! தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அள்ளிக்கொடுத்த பாஜக !