ஸ்டார் ஓட்டல்ல... 116-ம் நம்பர் ரூம்ல... 15 பெண்களோட... அதிமுக எம்.எல்.ஏவின் லீலைகளை புட்டு புட்டு வைக்கும் வழக்கறிஞர்..!

By Thiraviaraj RMFirst Published Apr 23, 2019, 1:18 PM IST
Highlights

அண்மையில் தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடுமைச் சம்பவத்தைவிட மற்றொரு
மோசமான சம்பவம் ஒன்று பெரம்பலூரில் நிகழ்ந்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அருள் பரபரப்பை கிளப்பி உள்ளார். 
 

அண்மையில் தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடுமைச் சம்பவத்தைவிட மற்றொரு
மோசமான சம்பவம் ஒன்று பெரம்பலூரில் நிகழ்ந்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அருள் பரபரப்பை கிளப்பி உள்ளார். 

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ., ஒருவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20க்கும் மேற்பட்ட
பெண்களை ஏமாற்றி இருக்கிறார். அந்தப் பெண்களை அவர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கி இருக்கிறார். இந்தக் காரியத்தை அந்த
எம்.எல்.ஏ., பலருடன் சேர்ந்து செய்திருக்கிறார். 

பெண்களுடன் உல்லாசமாக இருந் ததைக் காணொளிப் படம் எடுத்து அதை வைத்து அந்தப் பெண்களை மிரட்டி அவர்களை பலருக்கும்
விருந்தாக்கி இருக்கிறார் என்று பெரம்பலூரைச் சேர்ந்த அருள் என்ற வழக்கறிஞர் போலிசிடம் தாக்கல் செய்த புகாரில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் போலிசிடம் புகார் தெரிவிக்க சென்றபோது, போலிசார் அந்த எம்.எல்.ஏ.,வுக்கு சாதகமாக நடந்து கொண்டு புகார்
கொடுக்க வந்த பெண்களை மிரட்டி இருக்கிறார்கள். பெண்களுக்கு கொலை மிரட்டல்களும் வந்துள்ளன என்று தெரிவித்துள்ள அந்த
வழக்கறிஞர், பாலியல் கொடுமை வீடியோ, ஆடியோக்களை சில தினங்களில் வெளியிடப்போவதாக கூறியிருக்கிறார். 

இது தொடர்பாக செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அருள் அளித்துள்ள பேட்டியில், ’’தொடர்ச்சியாக இது சில ஆண்டுகளாகவே
நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ஆளும் கட்சியை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரே நேரடியாக
சம்பந்தப்பட்டிருப்பதுதான் பெரிய அதிர்ச்சி. மக்களுடைய பிரதிநிதிகளாக இருக்கக்கூடியவர்களே பெண்களின் பாதுகாப்புக்கு
அச்சுறுத்தலாக இருப்பது பெரிய மனவலியை ஏற்படுத்தி உள்ளது. 

அச்சுறுத்தல் வேலை கேட்டு வரும் பெண்களை, ஆசைகாட்டி, கட்டாயப்படுத்தி அச்சுறுத்தி பாலியல் தொல்லைகளை தந்துள்ளார்கள்.  
ஆசைப்படும் பெண்களை இச்சைக்கு இணங்குமாறு சில ஆட்களை தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ளனர். அறை எண் 116
கேட்கும் பெண்களை, கேட்கும் நபர்களுக்கு கொண்டு போய் விட்டு வரும் புரோக்கர் வேலையையும் சேர்த்து பார்த்துள்ளனர். ஸ்டார்
ஹோட்டல்ல அறை எண் 116-ல் கட்சி பெயரிலேயே ரூம் எடுத்திருக்கிறார்கள்.

தினமும் பல பெண்களை அழைத்து வந்திருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் ஈடுபட்டு இருந்திருக்கிறார். ராத்திரி நேரத்தில்தான்
அந்தஎம்எல்ஏவின் லீலைகளே ஆரம்பமாகிறது. மிரட்டுகிறார்கள் 2 நாளைக்கு முன்னாடிகூட பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தர
வந்தார். அவர் 2 குழந்தைகளுக்கு தாயார். கணவன் வெளிநாட்டில் இருக்கிறார். புகார் கொடுக்க முயன்ற பெண்ணை மிரட்டுகிறார்கள்.
மேலும் இவரோடு போ, அவரோடு போ என்று உறவு வைத்து கொள்ள சொல்லி உள்ளார்கள். பேரம் பேசுகிறார்கள் இதனால் அந்த பெண்
நேரடியாக போலீசுக்கு போய்விட்டார். 

அங்கு எம்.எல்.ஏ., மீது புகார் சொல்லவும், போலீஸோ பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து கொண்டு அதே எம்எல்ஏவிடம் அழைத்து
சென்று சமாதானம் பேசுகிறார்கள். பேரம் பேசுகிறார்கள். ஆனால் எதற்கும் மசியாத அந்த பெண் அழுது கொண்டே கிளம்பி
சென்றுவிட்டார். இதுபோல 15-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உறவினர்கள் சிலர் என்கிட்ட வந்து
முறையிட்டு நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறார்கள். 

இது சம்பந்தமான உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறோம். காவல்துறையும் விசாரணை நடத்த வேண்டும். இனியும் இந்த
மண்ணில் பெண்களுக்கு இப்படி ஒரு கொடுமை நிகழக்கூடாது" என்றார். 

click me!