கணவனின் இரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையிலேயே தர்ம அடி !!

Selvanayagam P   | others
Published : Dec 13, 2019, 10:42 PM IST
கணவனின் இரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி  - மணமேடையிலேயே  தர்ம அடி !!

சுருக்கம்

உத்தர பிரதேசத்தில் இரண்டாம் திருமணம் செய்தவருக்கு அவரது மனைவி மணமேடையில் வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  

உத்தர பிரதேசம் மாநிலத்தின் சாமிலி மாவட்டத்தை சேர்ந்தவர் பங்கஜ் குமார் . இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார்.   மஞ்சுவுக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய பங்கஜ் குமார் தீர்மானித்தார்.  

இதையடுத்து திட்சாரி என்ற கிராமத்தில் நேற்று பங்கஜ் குமாரின் இரண்டாவது திருமணவிழா நடைபெற்றது.  

அப்போது தனது குடும்பத்தாருடன் அங்கு சென்ற பங்கஜின் முதல் மனைவி மஞ்சு மணமேடையில் இருந்த பங்கஜ் குமாரை  அடி வெளுத்து வாங்கினார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் மஞ்சுவின் குடும்பத்தினர் பங்கஜ் குமாரை  காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

பங்கஜ் குமாருக்கு எதிராக மீரட் நகர் காவல்நிலையத்தில் வரதட்சணை மற்றும் குடும்ப தகராறு தொடர்பான வழக்குகள் நிலுவையில்  உள்ளது என போலீசார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி