மசாஜ் சென்டரில் விபச்சாரம்... மீட்கப்பட்ட கேரளா,கர்நாடகா அழகிகள்!! திருப்பூரில் பரபரப்பு...

By sathish kFirst Published May 30, 2019, 5:06 PM IST
Highlights

மசாஜ் சென்டர் நடத்துவதாக வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மசாஜ் சென்டர் நடத்துவதாக வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மசாஜ் நிலையம் என்ற பெயரில் நகரத்தின் முக்கிய பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் செய்து வருவது அங்கங்கே நடந்து வருகிறது. இதேபோல திருப்பூரில் மசாஜ் சென்டர் நடத்த  வீடு வாடகை எடுத்து விபச்சாரம் செய்து வந்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 4 அழகிகளை மீட்டனர். 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி கோவில் வீதியில் ஒரு வீட்டில் பெண்களை அழைத்து வந்து விபசாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் இருந்த 4 பெண்களை போலீசார் மீட்டனர். அங்கிருந்து ரூ.500 மற்றும் ஸ்வைப் மெஷின் ஆகியவற்றையும் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

அங்கிருந்த கேரள மலப்புரத்தை சேர்ந்த ரோஹித், கோழிக்கோடுவை சேர்ந்த முபாஷிர் ஆகிய இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதில், திருப்பூர் காலேஜ் ரோடு ஸ்டேன்ஸ் வீதியில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தேவி என்பவர் மசாஜ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இவரும் ரோஹித்தும் மசாஜ் நிலையத்தை கவனித்து வந்துள்ளனர். இங்கு தொழில் அதிபர்கள், கல்லூரி மாணவர்கள் மசாஜ் சென்டருக்கு வந்ததால் அழகிகளை வைத்து விபசாரம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இந்த விபச்சார தொழில் நடத்த கொங்கணகிரி வீதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். 

கடந்த சில நாட்களாக அந்த வீட்டில் வெளி மாநில அழகிகளை அழைத்து வந்து விபசாரம் நடத்தி வந்துள்ளார். இதற்கு முபாஷிர் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார். மேலும் இந்த வீட்டில்,  மீட்கப்பட்ட அழகிகளில் 2 பேர் கேரளாவையும், ஒருவர் கர்நாடகாவையும், ஒருவர் தமிழ்நாட்டையும் சேர்ந்தவர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோஹித், முபாஷிர் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 

click me!