இன்ஸ்டாகிராமில் நிர்வாண படங்களை பதிவிட்ட மருத்துவர்.. திட்டம் போட்டு தூக்கிய காதலி - அதிர்ச்சி சம்பவம்

Published : Sep 20, 2022, 07:44 PM IST
இன்ஸ்டாகிராமில் நிர்வாண படங்களை பதிவிட்ட மருத்துவர்.. திட்டம் போட்டு தூக்கிய காதலி - அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காதலி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் விகாஸ் ராஜன். உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்த இவர், சென்னையில் சில காலம் மருத்துவராக பணியாற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது. பிறகு பெங்களுருவில் பணியாற்றியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஆர்கிடெக்ட் ஒருவருடன் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

பிறகு இரு வீட்டாருக்கும் இவர்கள் காதல் தெரிவிக்கப்பட்டு திருமணத்திற்கும் சம்மதம் பெற்றுள்ளனர். இன்னும் சில மாதங்களில் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 10 தேதி பெண்ணின் நண்பர் வீட்டில் படுகாயங்களுடன் விகாஸ் மயங்கி கிடந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமாவிற்கு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?

சம்பவம் குறித்து பெண் மற்றும் நண்பர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. மருத்துவர் விகாஸ் தனது காதலியின் நிர்வாண படங்களை இன்ஸ்ட்ராகிராமில் போலி ஐடி ஒன்றை உருவாக்கி பதிவேற்றம் செய்து பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை சில நண்பர்களுக்கும் அவர் பகிர்ந்துள்ளார். 

கடந்த 8ஆம் தேதி விகாசின் காதலி இன்ஸ்டாகிராமில் தனது நிர்வாண படங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். காதலி ஆத்திரமடைந்து விகாஸ்சிடம் கேட்டதற்கு ஜாலியாக தான் இதை செய்தேன் நீ பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூற, ஆத்திரத்தில் சண்டை போட்டதுடன் விகாஸை பழிவாங்க வேண்டும் என  திட்டமிட்ட காதலி தனது ஆண் நண்பர்களான சுஷில், கவுதம் மற்றும் சூர்யா ஆகியோரிடம் விஷயத்தை கூறி திட்டம் தீட்டியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..சூப்பர் செய்தி.! நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல் !

கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி சுஷிலின் வீட்டில் திட்டம் தீட்டி, அந்த பெண் மருத்துவர் விகாஸை சுஷிலின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். திட்டமிட்டபடி விகாஸை அடித்த அந்த கும்பல், உடனே ஓடிவிட்டனர். பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விகாஸ்சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். போலீசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு..“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!