கணவனை கழற்றிவிட்டு கல்லூரி தோழனுடன் உல்லாசம்.. மாமியாரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அசிங்கம் செய்த மருமகள்..

By Ezhilarasan Babu  |  First Published Sep 20, 2022, 7:15 PM IST

கணவனைக்  கை விட்டு கல்லூரி தோழனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததுடன், தனது மாமியாரை நிர்வாணமாக வீடியோ எடுத்து கணவன் குடும்பத்தை மனைவி மிரட்டி வந்துள்ள கொடூரம் நடந்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது

.


கணவனைக்  கை விட்டு கல்லூரி தோழனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததுடன், தனது மாமியாரை நிர்வாணமாக வீடியோ எடுத்து கணவன் குடும்பத்தை மனைவி மிரட்டி வந்துள்ள கொடூரம் நடந்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது

பெரும்பாலும் கொலை தற்கொலை போன்ற சம்பவங்கள் கள்ளக் காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது. இந்த கள்ளக்காதல் சம்பவங்கள் நாடு முழுவதும் பரவலாக அதிகரித்துள்ளது. அதாவது திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்லப்படுவதுண்டு, ஆனால் சிலர் அற்ப சுகத்திற்காக திருமண உறவை மீறி மூன்றாவது நபருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது பரவலாக அதிகரித்துள்ளது. இது போன்ற உறவுகள் பெரும்பாலும் கொலை அல்லது தற்கொலையில் போய் முடிகின்றன. 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்:  3 முறை போலீஸ் வந்தும் திருந்தாத மாணவர்கள்.. போதையின் பிடியில் சிக்கிய மாணவர்கள் - கதறும் பெற்றோர்கள் !

இது போன்று தகாத உறவில் சிக்கிக் கொள்ளும் பலர் அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிகின்றனர். இந்த வரிசையில் ஒரு பெண் தனது கள்ளக்காதலனுக்காக தனது மாமியாரை நிர்வாணமாக வீடியோ எடுத்து கணவன் குடும்பத்தை மிரட்டி வந்துள்ள கொடூரம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-  டெல்லி  லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை வியாபாரி ஒருவர், தனது மனைவியுடன் கடந்த 4 ஆண்டுகளாக தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார், இருவரும் ஒரே வீட்டில் வெவ்வேறு அறைகளில் வசித்து வந்தனர். இதற்கிடையில் மனைவி தனது கல்லூரியில் தோழனுடன் பழகி வந்தார், இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது, அடிக்கடி வெளியில் சென்று  கல்லூரி காதலனுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதையும் படியுங்கள்: மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற ஐடெக் விபச்சாரம்.. உள்ளே திறந்து பார்த்தால் அரைகுறை ஆடைகளுடன் 4 இளம்பெண்கள்.!

இந்த விவகாரம் கணவனுக்கு தெரிந்தது. அதை கணவன் கண்டித்தார், இதற்கிடையில் மாமியாரின் வீட்டு 2 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை அபகரிக்க முடிவு செய்தார் மனவை, இதனால் மாமியாரின் படுக்கை அறையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினார், அதில் மாமியாரின் நிர்வாண காட்சிகள் பதிவானது,  ஒருகட்டத்தில் மனைவியின் கள்ளத்தொடர்பால் ஆத்திரம் அடைந்த கணவர் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்போது மாமியாரின் ஆபாச காட்சிகள் தன்னிடம்  இருப்பதாக கூறிய மனைவி, அதை வைத்து கணவனை மிரட்டத் தொடங்கினார்.

போலீஸ் புகாரை அடுத்த கள்ளக் காதலனுடன் தலைமறைவானதுடன், தன் மீதான வழக்கை திரும்பப் பெறாவிட்டால் மாமியாரின் ஆபாச காட்சிகளை சமூக வலைதளத்தில் பாரப்பி விடுவேன் என்றும் கணவனை மிரட்டியுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த கணவன், அது குறித்தும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், இதனையடுத்து வீட்டுக்கு வந்து அந்த அறையை சோதனையிட்டதில் அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரிந்தது. இந்நிலையில் மருமகள் மீது வழக்கு பதிவு செய்து  போலீசார் அவரை தேடி வருகின்றனர். 
 

click me!