வாகனம் நிறுத்துவதில் தகராறு.. இளைஞரை ஓட ஓட விரட்டி அடித்த CCTV காட்சி

Published : Sep 20, 2022, 03:17 PM ISTUpdated : Sep 20, 2022, 04:02 PM IST
வாகனம் நிறுத்துவதில் தகராறு.. இளைஞரை ஓட ஓட விரட்டி அடித்த CCTV காட்சி

சுருக்கம்

ஆவடி அருகே இருசக்கரம் வாகனம் நிறுத்துவதில் உருவான தகராறில் இளைஞரை விரட்டி விரட்டி அடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ரோஷன். இவர் சக்தி நகரில் அரிசி கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் தண்ணீர்  கேன்களும் விநியோகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்பவர் வீட்டின் எதிரே வண்டி நிறுத்தும் போது ரோஷன் என்பவருக்கும் பிரசாத் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்

இதில் ஆத்திரம் அடைந்த பிரசாந்த், ரோஷனை விரட்டி விரட்டி தாக்கியுள்ளார். இதில் அவமானமடைந்த ரோஷன் அருகே உள்ள ஒரு வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்கிறார். பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் செய்திகளுக்கு..ரஜினி சொன்ன அந்த நம்பர்.. பணமதிப்பிழப்பு முதல் பிரதமர் வரை ; மோடிக்கும் 8 ஆம் நம்பருக்கு உள்ள ‘சீக்ரெட்’ !

சம்பவத்தில்  ஈடுபட்ட  ஐடி ஊழியரான பிரசாந்த் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பிரசாந்தை திருமுல்லைவாயில் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ரோஷனை பிரசாந்த் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி வரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!