கஞ்சா, ஊசி மருந்துகள் என பல்வேறு விதமான போதை வஸ்துக்களுக்கு இளைய சமுதாயம் அடிமையாகி வருகிறது.
தமிழகத்தில் அதிக உயிரிழப்புகளுக்கு காரணமான மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்து வரும் நிலையில், தற்போது அதை மிஞ்சும் வகையில் கஞ்சா, ஊசி மருந்துகள் என பல்வேறு விதமான போதை வஸ்துக்களுக்கு இளைய சமுதாயம் அடிமையாகி வருகிறது.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருந்த போதிலும் தொடர்ந்து கஞ்சாவின் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கஞ்சா அடித்து விட்டு சகமாணவனை தாக்கிய மாணவர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் பலன் இல்லை என்று பள்ளி தலைமை ஆசிரியர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..ரஜினி சொன்ன அந்த நம்பர்.. பணமதிப்பிழப்பு முதல் பிரதமர் வரை ; மோடிக்கும் 8 ஆம் நம்பருக்கு உள்ள ‘சீக்ரெட்’ !
இந்த நிலையில் திருச்சியில் ஒரு பள்ளியில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நடைபெற்ற வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கஞ்சா அடித்த மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்ட, ஆசிரியர்களே பயந்து போய்விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கஞ்சா, கூல் லிப் மற்றும் பிற போதை பொருள்கள் மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் இருப்பதால் குற்ற செயல்கள் அதிகமாகி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த வீடியோவில் கூட எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக போலீசார் பலமுறை வந்தும் திருந்தாத மாணவர்களை எப்படி திருத்துவது என்று பெற்றோர்களிடம் கேட்பதில் இருந்தே தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?
மாணவர்கள் போதைப்பொருள்களுக்கு எவ்வளவு அடிமையாக இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். தமிழக அரசும், காவல்துறையும் இனியும் சரியான நடவடிக்கையை எடுக்காமல் இருந்தால் வளர்ந்து வரும் தலைமுறைக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்