உல்லாசத்திற்கு இடையூறு... ஆத்திரத்தில் குழந்தைக்கு சிகெரெட் சூடு... எட்டி உதைத்து கொலை... கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!

Published : Dec 08, 2019, 11:28 AM IST
உல்லாசத்திற்கு இடையூறு... ஆத்திரத்தில் குழந்தைக்கு சிகெரெட் சூடு... எட்டி உதைத்து கொலை... கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!

சுருக்கம்

கங்காவின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என்பதால், எனக்கு அந்த குழந்தையை ஆரம்பத்தில் இருந்து பிடிக்கவில்லை. நாங்கள் உல்லாசமாக இருப்பதற்கு இந்த குழந்தை இடையூறாக இருந்ததால் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று நான் மது போதையில் இருந்தேன்.

உல்லாசமாக இருப்பதற்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை எட்டி உதைத்து கொடூரமாக கொன்றதாக தாயின் கள்ளக்காதலனை தகவல் தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி கங்கா (28). கட்டிட வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு வரலட்சுமி(5), அருண் (3) இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சத்தியமூர்த்தி சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து, பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட மேஸ்திரி வெங்கடேசன் (35) என்பவருடன், கங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்யாவிட்டாலும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இதனையடுத்து, தன்னுடைய மகளை கங்கா கேரளா மாநிலத்தில் உள்ள தங்கையின் வீட்டில் வளர்த்து வந்துள்ளார். 

பின்னர், மகன் அருண், கங்கா, வெங்கடேசன் ஆகியோர் கடந்த 5 மாதத்துக்கு முன் சென்னை வந்து, மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம் சங்கரா நகர் 4-வது அவென்யூவில் வாடகை வீட்டில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன், கங்கா கேரளாவில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக தங்கை வீட்டிற்கு சென்றார். அப்போது, தனது மகனை வெங்கடேசனிடம் விட்டுச் சென்றுள்ளார். 

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தை அருண் திடீரென மயங்கி விழுந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று உயிரிழந்தது. இது தொடர்பாக கங்காவிற்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். அலறியடித்துக் கொண்டு கங்கா சென்னைக்கு புறப்பட்டார். இது தொடர்பாக மருத்துவர்கள் வெங்கடேசனிடம் விசாரித்த போது பதிலளிக்காமல் சிறிது நேரத்தில் அங்கிருந்து மாயமானார். இதை பார்த்து தாய் கங்கா கதறி அழுதார்.

பின்னர், வெங்கடேசனை தொடர்பு கொண்டபோது, அவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு, தலைமறைவானது தெரிந்தது. இதனால், சந்தேகமடைந்த கங்கா, குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், குழந்தை அருண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த வெங்கடேசனை கள்ளக்கறிச்சியில் வைத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், பல்வேறு அதிர்ச்சி தகவலை வாக்குமூலத்தில் "கங்காவின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என்பதால், எனக்கு அந்த குழந்தையை ஆரம்பத்தில் இருந்து பிடிக்கவில்லை. நாங்கள் உல்லாசமாக இருப்பதற்கு இந்த குழந்தை இடையூறாக இருந்ததால் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று நான் மது போதையில் இருந்தேன். அப்போது, குழந்தையை சிகரெட்டால் சுடு வைத்த போது அழுததால், ஆத்திரத்தில் காலால் வேகமாக எட்டி உதைத்தேன். இதில் குழந்தையின் தலை தரையில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி