குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு போன கணவன்...!! பக்கத்து வீட்டு பையனுடன் படுக்கையறையில் கட்டிப் புரண்ட மனைவி..!!

Published : Dec 13, 2019, 12:07 PM IST
குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு போன கணவன்...!! பக்கத்து வீட்டு பையனுடன் படுக்கையறையில் கட்டிப் புரண்ட மனைவி..!!

சுருக்கம்

ஆனாலும்  மனைவி அதை கேட்பதாக தெரியவில்லை ,  அனீஷ்வுடன்  பழகி அடிக்கடி உறவில் ஈடுபட்டு வந்தார் .

கள்ளக்  காதலை முடித்துக்கொள்ள முடிவுசெய்த கள்ளக்காதலியை சரமாரியாக குத்தி கள்ளக்காதலன் கொலை செய்துள்ள சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த அஞ்சுமுக்கு பகுதியை சேர்ந்தவர்   ஷெரிப் இவருக்கு சைலா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் ஷெரிப் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருவதால்  அவரது மனைவி  சைலா (40) வயது அதே பகுதியை சேர்ந்த அனிஷ் என்ற இளைஞருடன் நட்பாக  பழகி வந்துள்ளார் பின்னர்  அது கள்ளக்காதலாக மாறியது.

 

இந்நிலையில் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து  உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர் . உறவினர்கள் மூலம்  மனைவி நடவடிக்கை  கணவன் ஷெரிப்புக்கு  தெரிய வந்தது . வெளிநாட்டில் இருந்து அவரது கணவர் ஷெரிப்  மனைவியை கண்டித்தார் .  ஆனாலும்  மனைவி அதை கேட்பதாக தெரியவில்லை ,  அனீஷ்வுடன்  பழகி அடிக்கடி உறவில் ஈடுபட்டு வந்தார் .  ஒருகட்டத்தில் அவரது கணவர் சைலாவை விவாகரத்து செய்ய முடிவு செய்து  விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார் .  அதில் பதறிப்போன சைலா  கணவனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார் .  இதனை அடுத்து அனீஷ்வுடனான உறவை துண்டித்துக் கொள்ள முடிவெடுத்து அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார் .  ஆனால் அனீஷ்  சைலாவை விடமறுத்து  துரத்தி வந்தார் . 

இந்நிலையில் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு  வீடு திரும்பிக் கொண்டிருந்த சைலாவை  வழிமறித்த  அனிஷ் அவரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஆனால் சைலா  இனி பழையபடி பழக முடியாது என தெரிவித்ததையடுத்து கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சைலாவை அனிஷ் சரமாரியாக மார்பு , தோள்பட்டை என 31 இடங்களில் சரமாரியாக குத்தினார் இதில்  அலறியடுத்து  ரத்தவெள்ளத்தில் மயங்கினார் சைலா ,  அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த  சைலாவை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . ஆனால்  அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் . இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்  கொலையாளி அனீஷை தேடி வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!