மெத்தாம்பிட்டமைன் போதைப்பொருள் கடத்தல்..!! மாஜி அதிமுக அமைச்சரின் உறவினரை தட்டி தூக்கிய போலீஸ்.?

By Ajmal KhanFirst Published May 2, 2024, 11:17 AM IST
Highlights

போதைப் பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மெத்தாம்பிட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 
 

போதைப்பொருள் கடத்தல்

தமிழகத்தில் பொதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளால் குற்றசம்பவங்களும் நாள் தோறும் நடைபெறுவதாக வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விநியோகத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர். 

மாஜி அமைச்சரின் உறவினர் கைது.?

இந்தநிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெத்தாம்பிட்டமைன் போதை பொருள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக  காதர் மைதீனை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுல்தான் என்பவரிடம் இருந்து வாட்ஸ் அப் குழு மூலம் போதைப்பொருளை வாங்கியதாக தெரிவித்துள்ளார். சுல்தான் அலாவுதீன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது தான் திருவான்மியூரை சேர்ந்த ராகுல் என்பவரிடம் மொத்தமாக போதைப் பொருள் வாங்கியதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில் திருவான்மியூர் பகுதிக்கு சென்ற தனிப்படை போலீசார் வீட்டில் பதுங்கி இருந்த ராகுல் என்பவரை பல போராட்டத்திற்கு பின்னர் கைது செய்தனர்.  இதில் ராகுல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின்  உறவினர் என கூறப்படுகிறது. மெத்தாம்பிட்டமைன் போதைப்பொருள் தொடர்பாக போலீசார் ராகுலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொளுத்தும் வெயில்..! ஒரே வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த காய்கறிகளின் விலை.! ஒரு கிலோ பீன்ஸ் என்ன விலை?
 

click me!