மாணவிகளுக்கு பாலியல் வலைவீசியது எப்படி..? ஆசிரியர் ராஜகோபாலனின் செல்போனில் அகப்பட்ட லீலைகள்..!

By Thiraviaraj RMFirst Published May 26, 2021, 10:49 AM IST
Highlights

பத்ம சேஷாத்திரி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆசிரியர் ராஜகோபாலனினின் லீலைகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர். 

பத்ம சேஷாத்திரி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆசிரியர் ராஜகோபாலனினின் லீலைகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர். 

ராஜகோபாலனின் அத்துமீறலை பொறுத்துக் கொள்ள முடியாத மாணவி ஒருவர் அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவரிடம் தனது நிலைப்பற்றி எடுத்து கூறி வருத்தப்பட்டுள்ளார். தற்போது மாடலிங் துறையில் உள்ள அந்த மாணவி ஆசிரியர் பற்றிய தகவல்களை சேகரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதன் பிறகு இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து பள்ளிக்கூடம் செயல்பட்டு வரும் எல்லைக்குட்பட்ட அசோக் நகர் மகளிர் போலீசார் ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சே சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். நங்கநல்லூர் இந்து காலனி 7-வது தெருவில் வசித்து வந்த ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வருகிற 8-ந்தேதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் ராஜகோபாலனிடம் தி.நகர் துணை கமி‌ஷனர் ஹரிகிரண்பிரசாத் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமி‌ஷனர் ஜெயலட்சுமியும் விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில், ராஜகோபாலன் பற்றி பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜகோபாலன் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஆன்- லைனில் வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். அவரது ஆன்-லைன் வகுப்பு குழுவில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்துள்ளனர். வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே அரைகுறை ஆடையுடன் ஆன்-லைன் வகுப்பில் ராஜகோபாலன் தோன்றிய புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது

.

இந்நிலையில் மாணவிகளின் செல்போன் எண்களுக்கு ஆபாச வீடியோக்களை ராஜகோபாலன் அனுப்பி இருப்பதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. போலீஸ் விசாரணையின் போது இதனை அவர் வாக்குமூலமாக அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராஜகோபாலனின் லீலைகள் பற்றி போலீசார் கூறுகையில், ‘’ஆன்-லைன் வகுப்புக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவில் மாணவிகளின் செல்போன் எண்களை எடுத்து அவர்களுக்கு தனியாக குறுஞ்செய்திகளை அனுப்புவதை ஆசிரியர் ராஜகோபாலன் வழக்கமாக வைத்து இருந்துள்ளார். குறிப்பிட்ட மாணவியின் செல்போன் எண்ணுக்கு அவரது உடை மற்றும் உடலை பற்றி தகவல்களை முதலில் அனுப்புவார். இதற்கு மாணவி அனுப்பும் பதிலை வைத்து அடுத்தக்கட்ட குறுஞ்செய்திகளையும் அனுப்புவார்.

ராஜகோபாலனின் குறுஞ்செய்தி தகவல்களுக்கு மாணவிகள் ஆட்சேபனை தெரிவித்தால், “சாரி, ராங் போஸ்ட் தவறாக அனுப்பி விட்டேன்”என்று தகவல் போட்டுவிட்டு அடுத்த மாணவியின் செல்போனுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். இதுபோன்று தினமும் பல மாணவிகளுக்கு ராஜகோபாலன் குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேல் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் ஆன்- லைன் மூலமாகவே மாணவ- மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. பத்ம சேஷாத்திரி பள்ளியிலும் ஆன்-லைன் வகுப்புகளே நடைபெற்று வருகின்றன. இதனை பயன்படுத்தியே ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த ஓராண்டாகவே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ராஜகோபாலனிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக 5 நாட்கள் அவரை காவலில் எடுக்க அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசார் முடிவு செய்துள்ளனர். ராஜகோபாலனின் செல்போன் - லேப்டாப்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் பல்வேறு தகவல்களை அழித்து இருந்தார். ஆனால் “ரெக்கவரிசாப்ட்வேர்” மூலமாக சைபர்கிரைம் போலீசார் அதில் உள்ள தகவல்களை திரட்டினர்.

அப்போது மாணவிகளிடம் தனிப்பட்ட முறையில் ராஜகோபாலன் உரையாடிய தகவல்கள் அனைத்தும் கிடைத்தது. இதனை வைத்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் போலீசார் ரகசியமாகவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியர் ராஜகோபாலனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட மாணவிகளின் பட்டியலை சேகரித்து அவர்கள் அளிக்கும் தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்து வருகிறார்கள். ராஜகோபாலனுக்கு எதிராக போலீசாரின் நடவடிக்கை வேகம் எடுத்துள்ளது.

click me!