கல்லூரி மாணவியை இரவு முழுக்க வச்சு செய்த ஹாஸ்டல் வார்டன்..!! மனைவி வீட்டில் இல்லாததால் தலைக்கு ஏறிய சபலம் ..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 15, 2019, 11:42 AM IST
Highlights

இதில் பேராசிரியராக உள்ள ஒருவர் அங்குள்ள ஹாஸ்டலில் வார்டனாகவும்  இருந்து வருகிறார்.  இந்நிலையில்  பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியிடம்  மாணவி ஒருவர் புகார் கூறியிருந்தார். அதில் பேராசிரியரும் ஹாஸ்டல் வார்டனுமான நபர்,  அன்றாடம் இரவில் போன் செய்து தன்னை உடல் உறவுக்கு அழைப்பதுடன் மனைவி வீட்டில் இல்லை எனவே வீட்டிற்கு வந்து உணவு சமைத்து கொடுக்க கூறி குறுஞ்செய்தி அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

பல்கலைகழக மாணவியை தொடர்ந்து உடலுறவுக்கு அழைத்து தொந்தரவு  செய்துவந்த பேராசிரியர், பல்கலை கழகத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  அந்த நபர் ஹாஸ்டல் வார்டனாகவும் இருந்தவர் ஆவார்.  குறிப்பான மனைவி வீட்டில் இல்லை நீ வந்து சமைத்து  கொடு என அந்த மாணவிக்கு அவர் தொடர்ந்து  குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சரில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. 

கல்வி போதிக்கும் பேராசிரியரே மாணவிக்கு இப்படி  குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உத்ரகாண்ட் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜிபி பங்க்  என்ற  பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.  இதில் பேராசிரியராக உள்ள ஒருவர் அங்குள்ள ஹாஸ்டலில் வார்டனாகவும்  இருந்து வருகிறார்.  இந்நிலையில்  பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியிடம்  மாணவி ஒருவர் புகார் கூறியிருந்தார். அதில் பேராசிரியரும் ஹாஸ்டல் வார்டனுமான நபர்,  அன்றாடம் இரவில் போன் செய்து தன்னை உடல் உறவுக்கு அழைப்பதுடன் மனைவி வீட்டில் இல்லை எனவே வீட்டிற்கு வந்து உணவு சமைத்து கொடுக்க கூறி குறுஞ்செய்திஅனுப்புவதாகதெரிவித்துள்ளார். 

அவரை புறக்கணித்து வந்தபோதும்  அவர் தம்மை விடுவதாக தெரியவில்லை,  ஆபாசமான முறையில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி தன்னை மன உளைச்சலுக்கு ஆட்படுத்திவருகிறார்.  சில நேரங்களில் இரவில் தன்னிடம் பேசுமாறு  போன் செய்து வற்புறுத்திவருகிறார்.  அவரது அழைப்பை கட் செய்த பின்னரும் தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுக்கிறார் என மாணவி புகார் கூறியுள்ளார்.  இதனையடுத்து ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியதில் பேராசிரியர் மீது வைத்து குற்றச்சாட்டு உண்மையென தெரியவந்ததையடுத்து, பல்கலையில் இருந்து அவர்  பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  இதனையடுத்து அம்மாநில ஆளுநர் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பல்கலைக்கழகத்திற்கு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!