விஐபிகளுக்கு மசாஜ்... உல்லாச விடுதியாக மாறிய அரசு மருத்துவமனை..!

By Thiraviaraj RMFirst Published Oct 10, 2019, 6:27 PM IST
Highlights

உள் நோயாளிகள் தங்கும் பிரிவில் உள்ள குளிர்சாதன அறை விஐபி நோயாளிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. சாதாரண கீழ்தட்டு மக்களை குளிசாதன அறைக்குள் அனுமதிப்பதில்லை என்கிறார்கள். 

சென்னை அரும்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு யோகா- இயற்கை மருத்துவமனையிக் தினமும் பல நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.  இங்கு மசாஜ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் அரசு உயரதிகாரிகளுக்கு மட்டும்  மசாஜ் வழங்கப்பட்டு வருவதாகவும் சாதாரண் நோயாளிகளுக்கு எந்த ஒரு கவனிப்பும் தருவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அரசு உயர் அதிகாரிகளுக்கு ராஜபோக உபசரிப்பு அளிக்கப்படுகிறது. 

அங்குள்ள தலைமை மருத்துவர் தனக்கு தலைமை செயலாளரை தெரியும், அமைச்சரை தெரியும் என்று அங்குள்ள ஊழியர்களை மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. உள் நோயாளிகள் தங்கும் பிரிவில் உள்ள குளிர்சாதன அறை விஐபி நோயாளிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. சாதாரண கீழ்தட்டு மக்களை குளிசாதன அறைக்குள் அனுமதிப்பதில்லை என்கிறார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ஊழியர் ஒருவர் தாமதமாக வந்ததால் அங்கு காத்திருந்த விஐபி ஒருவருக்கு மசாஜ் செய்ய முடியாமல் போயுள்ளது. இதனை அறிந்த அந்த ஊழியரை தலைமை மருத்துவர் பணியிட மாற்றம் செய்து தூக்கியடித்துள்லார். 

அத்தோடு செங்கல்பட்டு அருகில் உள்ள உயர்தர யோகா மருத்துவமனக்கு தான் தான் தலைமை மருத்துவர் என்றும் அந்த மருத்துவமனையை கொண்டு வந்ததே தான் தான் என்றும் பெருமையடித்துக் கொண்ண்டுள்ளாராம். அரசின் திட்டங்களை, விதிகளை மதிக்காமல் தலைமை மருத்துவர் அதிகார துஷ்பிரயேகம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் செங்கல் பட்டு உயர்யோக மருத்துவமனையை கண்காணிக்கும் பொறுப்பையும் தனது செல்வாக்கை வைத்து பெற்றுள்ளார் தலைமை மருத்துவம் மணவாளன். 

click me!