முட்டை தோசை கேட்ட கணவர்.. கடைக்கு வாங்க சென்ற மனைவி.. சைடு கேப்பில் ரவுடியை கொத்துக்கறி போட்ட கும்பல்!

Published : Apr 27, 2024, 10:16 AM ISTUpdated : Apr 27, 2024, 11:34 AM IST
முட்டை தோசை கேட்ட கணவர்.. கடைக்கு வாங்க சென்ற மனைவி.. சைடு கேப்பில் ரவுடியை கொத்துக்கறி போட்ட கும்பல்!

சுருக்கம்

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி லொட்டை (எ) ஆனந்த். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

சென்னையில் மனைவி கடைக்கு சென்று முட்டை வாங்கி வருவதற்குள் 8 பேர் கொண்ட கும்பலால் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள சிவாஜி நகரில் வசித்து வருபவர் ரவுடி லொட்டை என்ற ஆனந்த்(29). இவரது மனைவி ரோஜா. தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மனைவியிடம் ரவுடி ஆனந்த் முட்டை தோசை கேட்டுள்ளார். கணவர் முட்டை தோசை கேட்டதை அடுத்து கடைக்கு சென்று முட்டை வாங்கி வர மனைவி சென்றுள்ளார். இதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்ட 8 பேர் கொண்ட ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிக்குள் புகுந்து ஆனந்தை சுத்துப்போட்டு சரமாரியாக வெட்டியுள்ளனர். 

இதையும் படிங்க: என்னை பார்த்து குழந்தை பெத்துக்க முடியாதவன் என தந்தை திட்டியதால் கொன்றேன்.. மகன் பகீர் வாக்குமூலம்!

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ரவுடி ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. கடைக்கு சென்ற மனைவி வீட்டுக்கு வந்து பார்த்த போது கணவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இதையும் படிங்க:  சொத்துக்காக பாக்ஸிங்கில் குத்துவது போல தந்தையின் முகத்தில் கொடூர தாக்குதல்! பகீர் வீடியோ! வசமாக சிக்கிய மகன்!

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிக்கலாம் என கூறப்பட்டுகிறது. மேலும், தலைமைறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ரவுடி ஆனந்தின் சகோதரர் சுரேஷை கடந்த ஜனவரி மாதம் கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரவுடி கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி