என்னை பார்த்து குழந்தை பெத்துக்க முடியாதவன் என தந்தை திட்டியதால் கொன்றேன்.. மகன் பகீர் வாக்குமூலம்!

By vinoth kumarFirst Published Apr 27, 2024, 7:14 AM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகுவிளை வாட்டர் டேங்க்ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (65). தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். 

குமரியில், ரூ.4 லட்சம் பேரம் பேசி ஆட்களை ஏவி தந்தையை மகனே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசில் மகன் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகுவிளை வாட்டர் டேங்க்ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (65). தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 10-ம் தேதி காலையில் இவர் பணி முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அங்கிருந்து சிறிது தூரத்தில் பிரபாகரன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தந்தைக்கு வலிப்பு நோய் இருப்பதால் கீழே விழுந்து படுகாயம் அடைந்திருக்கலாம் ஆகையால் இதுதொடர்பாக போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டாம் என மருத்துவ ஊழியர்களிடம் மகன் கூறியதால் அவர்களும் தெரிவிக்கவில்லை.  

இதையும் படிங்க: என்னுடன் பழகாத நீ வேறு யாருடனும் இனி பழகக்கூடாது! செத்து போ! கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலன்!

ஆனால், கடந்த 12ம் தேதி சிகிச்சை பலனின்றி பிரபாகரன் உயிரிழந்தார். முதலில் அனீஷ்குமார் கூறியபடி போலீசில் தகவல் தெரிவிக்காத ஊழியர்கள், பிரபாகரன் உயிரிழந்ததால் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

முதலில் மகன் கூறியடி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பிரபாகரன் உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனையில் அறிக்கையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரபாகரனின் தலையில் வெட்டு காயம் இருப்பதால் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அனீஷ்குமார் உள்பட 3 பேர் வசமாக சிக்கினர். அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது பிரபாகரனை கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து அனீஷ்குமார், ராஜா (25), சுதன் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க: தலைக்கேறிய கஞ்சா போதை! ரோட்ல போறவங்க வரவங்களை வெட்டிய இளைஞர்கள்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். அதில், டிப்ளமோ முடித்த நான் சமையல் அறைக்கு கப்போடு செய்து கொடுக்கும் பணி செய்து வந்தேன். கடந்த 2019-ம் ஆண்டு அனுஷா என்பவரை மணந்தேன். பின்னர் திருமணமாகி 4 வருடங்களாகியும் குழந்தை இல்லை. அப்போது தந்தை பிரபாகரன், குழந்தை பெத்துக்க முடியாதவன், வாய் பேசுறான் பார் என என்னை திட்டியதால் ஆத்திரத்தில் இருந்தேன்.  ஆகையால் ஆட்களை ஏவி தந்தையை
கொலை செய்தேன் என்றார். 

click me!