இதுக்காகத்தான் அவனுங்கள சுட்டுத் தள்ளினோம்… என்கவுண்ட்டர் குறித்து போலீசார் விளக்கம் !!

Published : Dec 06, 2019, 10:31 AM ISTUpdated : Dec 06, 2019, 11:00 AM IST
இதுக்காகத்தான் அவனுங்கள சுட்டுத் தள்ளினோம்… என்கவுண்ட்டர் குறித்து  போலீசார் விளக்கம் !!

சுருக்கம்

டாக்டர் பிரியங்கா ரெட்டியை கொன்றது எப்படி என நடித்துக் காட்டச் செய்வதற்காக குற்றவாளிகள் நான்கு பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, துப்பாக்கியைப் பறித்து எங்களை அவர்கள் சுட முயன்றதால் தற்காப்புக்காகவே சுட்டுக் கொன்றோம்  போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபார்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை 4 போர் சேர்ந்து கற்பழித்து எரித்து கொலை செய்தனர். இதையடுத்து டிரைவர், கிளீனர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை ஹைதராபாத் போலீசார் காவலில் எடுத்து விசாரண நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை அவர்கள் 4 பேரும் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள  சாம்ஷாபாத் போலீஸ் துணை கமிஷனர் பிரகாஷ் ரெட்டி ,  பெண் டாக்டர் பலாத்காரம் தொடர்பான விசாரணைக்கு, சம்பவம் நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை சைதராபாத் போலீசார் அழைத்து சென்றனர்.. 

குற்றம் எப்படி நடந்தது என்பது பற்றி விளக்குமாறு குற்றவாளிகளிடம் கூறினர். ஆனால், குற்றவாளிகள், போலீசாரிடம் இருந்த ஆயுதங்களை பறித்து சுடத்துவங்கினர். இதனால், தற்காப்புக்காக போலீசார் திருப்பி சுட்டதில், 4 பேரும் உயிரிழந்துவிட்டனர் என்றார்.

சைதாராபாத் போலீஸ் கமிஷனர் வி சி சஜநர் கூறுகையில், குற்றவாளிகள் முகமது ஆரிப், நவீன் சிவா, சென்னகேசவலு ஆகியோர் இன்று அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணிக்குள் நடந்த என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளேன். இதன் பிறகு கூடுதல் தகவல்கள் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!