கல்லூரி பேராசிரியர், ஆராய்ச்சி மாணவியை கட்டிப்பிடித்தாரா.? மாணவி ஒருவர் திருச்சி கலெக்டரிடம் புகார்.!!

By Thiraviaraj RMFirst Published Mar 9, 2020, 10:56 PM IST
Highlights

உயிர் தகவலியல் துறை உதவி பேராசிரியர் ஜெயச்சந்திரன், என்னுடைய கைகளை இழுத்து ஆபாச வார்த்தைகளை பேசி பாலியல் வற்புறுத்தல் மற்றும் அத்துமீறிய செயல்களில் ஈடுபட முயற்சித்தார். இது தொடர்பாக 25.01.2020 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் புகார் மனு அளித்தேன்.இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கிறார் மாணவி ஒருவர்.இதனால் பல்கலைக்கழகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் படபடத்துக் கிடக்கிறது.

T.Balamurukan

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாணவி கண்ணீர் மல்க காத்திருந்து கலெக்டரை சந்தித்தார்.அப்போது

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும் என்னிடம் உயிர் தகவலியல் துறை உதவி பேராசிரியர் ஜெயச்சந்திரன், என்னுடைய கைகளை இழுத்து ஆபாச வார்த்தைகளை பேசி பாலியல் வற்புறுத்தல் மற்றும் அத்துமீறிய செயல்களில் ஈடுபட முயற்சித்தார். இது தொடர்பாக 25.01.2020 அன்று பல்கலைக்கழக துணைவேந்தரிடம் புகார் மனு அளித்தேன். இதன் பெயரில் அமைக்கப்பட்ட விசாரணை குழு என்னிடம் 13 நாள்கள் விசாரணை நடத்தி மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும், துணைவேந்தர் எனது ஆராய்ச்சி படிப்பு தொடர வழிகாட்டியாக இரு பேராசிரியர்களை நியமித்தார். ஆனால் அந்த இரு பேராசிரியர்களளும் பல காரணங்களை கூறி எனக்கு வழிகாட்டியாக இருக்க மறுத்துவிட்டனர்.

வேறுவழியின்றி இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸார் 25.02.2020 இல் வழக்குப் பதிவு செய்து இன்று வரை கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உதவி பேராசிரியர் மீது தமிழக அரசு பணியாளர்கள் ஒழுக்கம் தொடர்பான விதிகளின்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், எனது ஆராய்ச்சி படிப்பு தொடர்வதற்கு உதவி செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாலியல் தொந்தரவு என்பது அனைத்து துறைகளிலும் காமம் தலைக்கேறி போய் இருக்கிறது. கூடுதலாக வேலியை பயிர் மேய்வது பெண்களுக்கு பாதுகாப்பு கேள்வி குறியாக இருக்கிறது.

click me!