சிறுவனை அடித்துக் கொன்று குப்பைக் கிடங்கில் புதைத்த கொடூரம் !! அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் கைது !!

Published : Dec 11, 2019, 09:09 AM IST
சிறுவனை அடித்துக் கொன்று குப்பைக் கிடங்கில் புதைத்த கொடூரம் !! அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் கைது !!

சுருக்கம்

திருச்சி அரியமங்கலத்தில்  பன்றியை திருடி விற்பனை செய்து வந்த சிறுவனை அடித்துக்கொன்று குப்பை கிடங்கில் புதைத்த அதிமுகமுன்னாள் கவுன்சிலர் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் அலியார். இவரது மகன் அப்துல் வாஹித் . 6-ம் வகுப்பு படித்து வந்த அப்துல் வாஹித் சமீபகாலமாக பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. கடந்த 3-ந்் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் அப்துல்வாஹித் கிடைக்கவில்லை. அவன் எங்கே சென்றான்? என்ன ஆனான்? என்பது தெரியாமல் பெற்றோர் தவித்தனர். இது குறித்து அலியார் கடந்த 6-ந் தேதி அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுவனை தேடிவந்தனர்.

பிரபல ரவுடியும் முன்னாள் அதிமுக கவுன்சிலருமான  சேகர் என்பவரின்  மகன் முத்துக்குமார் இவர் பன்றிகள் வளர்த்து வருவதாகவும், அவற்றை பார்க்க அடிக்கடி அப்துல்வாஹித் வருவதும் தெரிந்து, சிறுவன் மீது அவர்கள் மிகவும் கோபமாக இருந்தது தெரியவந்தது.

மேலும் சிலர் பன்றிகளை  பிடித்து விற்பனை செய்து வந்த சிலருக்கு அப்துல் வாஹித் உதவி செய்வதாக கூறப்பட்டது. குறிப்பாக பன்றிகள் எங்கே நிற்கின்றன என அவன் வேவு பார்த்து சொல்வதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த 3-ந்் தேதி மாலை அப்துல்வாஹித்  அங்கு வந்துள்ளான்.  இதனால் ஆத்திரமடைந்த முதத்துக்குமார் அவனை கட்டி வைத்து அடித்துள்ளார். இதில் வாஹிர் உயிரிழந்ததாக தெரிகிறது. இதையடுதது வாஹித்தின் பிணத்தை அவர்கள் குப்பைக் கிடங்களில் புதைத்துவிட்டனர்.

இது குறித்து முத்துக்குமாரை போலீசார் கைது செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!