ஜாரா மகள் அல்ல இன்னொரு தாய்... மகள் செய்த செயலால் கதறி அழுத அர்ச்சனா!! வைரலாகும் வீடியோ..

Published : Jul 13, 2022, 11:54 AM IST
ஜாரா மகள் அல்ல இன்னொரு தாய்... மகள் செய்த செயலால் கதறி அழுத அர்ச்சனா!! வைரலாகும் வீடியோ..

சுருக்கம்

பிரபல தொகுப்பாளினியும், பிக்பாஸ் போட்டியாளருமான அர்ச்சனா நேற்று தன்னுடைய 40 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் தன் மகள் செய்த செயலால் கதறி அழுதுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.  

தன்னுடைய எளிமை, அழகு, தமிழ் உச்சரிப்பு போன்றவற்றால் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா. அனைவராலும் விரும்பப்படும் தொகுப்பாளினியாக இருக்கும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் சில விமர்சனங்களுக்கும் ஆளானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த கடைசி நொடி வரை அன்பு ஜெயிக்கும் என்று சொல்லிக்கொண்டே இருந்த இவர், பிக்பாஸ் வீட்டில் தனக்கான ஒரு குரூப்பை வைத்திருந்ததும், ஆரியை எதிர்த்து அவரது ஆர்மியை சேர்ந்த ரசிகர்களை கடுப்பேற்றியதும் தான், ஒரு கட்டத்தில் குறைவான வாக்குகளை பெற்று இவர் வெளியேற காரணமாக அமைந்தது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், தன்னை பற்றி எழுந்த விமர்சனங்களை கண்டு துவண்டு விடாமல் அவற்றிக்கு பதிலடியும் கொடுத்தார். மேலும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' படத்தில் மகள் ஜாராவுடன் இணைந்து நடித்திருந்த இவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்தது. 'டாக்டர்' படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே....

மேலும் செய்திகள்: துளியும் மேக்கப் இன்றி... மூன் லைட் வெளிச்சத்தில் மின்னும் நட்சத்திரமாய் மூட் அவுட் செய்யும் திவ்ய பாரதி!!

இந்நிலையில் அர்ச்சனா நேற்று தன்னுடைய 40 வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அப்போது அர்ச்சனாவின் மகள் ஜாரா கொடுத்த உணர்வு பூர்வமான பரிசை பார்த்து கதறி அழுத்துள்ளார் அர்ச்சனா. இது குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அர்ச்சனா கூறியுள்ளதாவது, தன்னுடைய நாற்பதாவது பிறந்த நாள் ஸ்பெஷலாக என்ன செய்தார்கள் என்பதை இங்கு குறிப்பிட்டுள்ளேன்....

மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சமந்தா போன்ற 16 முன்னணி நடிகைகளின் அதிர்ஷ்டம் பொங்கும் ராசிகள் என்னென்ன தெரியுமா?

ஜாரா தனக்கு ஏழு பக்கம் கொண்ட நீண்ட கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் மிகவும் வலுவான உணர்ச்சிகள் நிறைந்திருந்தன, பின்னர் எனக்கு என் முதல் சாலிடர் கல் பதித்த மோதிரத்தை பரிசளித்தார். எனது 40ஆவது பிறந்த நாளின் அழகான தருணத்திற்கு ஜாராவிற்கு நன்றி . இதற்கெல்லாம் உதவிய அருண் மற்றும் அனிதா, அதாவது தன்னுடைய தங்கை மற்றும் தங்கையின் கணவருக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் நான் உங்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளேன். நீங்கள் இல்லாமல் எனக்கு வாழ்க்கை ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது, என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருவதோடு,  ஜாரா உங்களுடைய மகள் அல்ல இரண்டாவது தாய் என்பது போல் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!