
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுஷாந்த் சிங், இவர் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்கை வரலாற்று படமான தோனி தி அண்டோல்டு ஸ்டோரி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆனார். நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதற்கு தற்போது வரை விடை கிடைக்கவில்லை. அவரது மரணம் தொடர்பாக தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதால் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... வாரிசு நடிகையுடன் நெருக்கம் காட்டும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்... விரைவில் திருமணமா?- தீயாய் பரவும் தகவல்
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையில் இதுவரை 35 பேரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளனர். அதில் நடிகையும், சுஷாந்த் சிங்கின் காதலியுமான ரியா சக்ரபோர்த்தியின் பெயரும் இடம்பெற்று உள்ளது. அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், நடிகை ரியா தனது சகோதரர் மூலம் போதைப்பொருட்களை வாங்கி சுஷாந்துக்கு கொடுத்ததாகவும், சுஷாந்தின் தீவிர போதைப் பழக்கத்திற்கு ரியாவும் உடந்தையாக இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... அஜித்தைப் போல் கார் மீது மோகம் கொண்ட அனுஷ்கா... வீட்டில் இத்தனை சொகுசு கார்கள் வைத்திருக்கிறாரா? - முழு விவரம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.