நான்காவது முறையாக உதயநிதியுடன் கைகோர்க்கும் சந்தானம்..நாளை வெளியாகும் டீசர்!

Published : Jul 12, 2022, 09:52 PM ISTUpdated : Jul 12, 2022, 10:04 PM IST
நான்காவது முறையாக உதயநிதியுடன் கைகோர்க்கும் சந்தானம்..நாளை வெளியாகும் டீசர்!

சுருக்கம்

 முன்னதாக  உதயநிதி - சந்தானம் இருவரும் ஒரு கல் ஒரு கண்ணாடி, கதிர்வேலன் காதல், நண்பேண்டா உள்ளிட்ட மூன்று படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

நகைச்சுவை நடிகர், மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக அறிமுகமான சந்தானம் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா மூலம் மிகவும் பிரபலமானார். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகராக மாறிவிட்ட அவர் திரையுலகிலும் கால் பதித்தார். முதலில் ஹீரோகளுக்கு நண்பனாகவும், நகைச்சுவை பாத்திரத்திலும் நடித்து வந்தார் சந்தானம். சூர்யா, கார்த்தி,  உதயநிதி, ஆர்யா என இளம் நடிகர்கள் அனைவரோடும் கைகோர்த்து நல்ல பாராட்டுகளை பெற்றிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...சோழர் புலியாக விக்ரம்..டீசரில் மிஸ்ஸான காட்சிகளை நாளை வெளியிடும் தயாரிப்பு நிறுவனம்!

பின்னர் விஜய் டிவியில் இருந்து உருவான மற்றொரு நாயகனாக சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தானும் ஹீரோவாகும்  முடிவை எடுத்த சந்தானம், அரை எண் 350 -ல் கடவுள் என்னும் படத்தில் நாயகனாக நடித்தார். பின்னர் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்குதுட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, ஏ1, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலானோ, சபாபதி, முகவர் கண்ணாயிரம் என அடுத்தடுத்து படங்களை கொடுத்து வந்தார்.

 நகைச்சுவை நாயகராக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் மக்கள் இவரை ஏற்றுக் கொண்டனர். இதனால் இவரது படங்கள் ஓரளவுக்கு வெற்றியும் கண்டன தற்போது சந்தானம் "குலு குலு"  என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேயாத மான் புகழ் ரத்னகுமார் இயக்கியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மே மாதம் வெளியானது. அதில் சந்தானம் கவிழ்ந்த லாரியின் முன்னால் அமர்ந்து ரம்மி விளையாடுவது போன்ற காட்சிகள் இருந்தன.

 

படம் குறித்து பேசி இருந்த இயக்குனர் "குலு குலு "  தனது முதல் இரண்டு படங்கள் போலவே ஒவ்வொரு நாளும் கடைசி என வாழ்க்கையை  வாழும் நாடோடி குறித்த கதையாகும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த படத்தில் சந்தானத்துடன் ஜார்ஜ் மரியான், தீனா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, அதுல்யா சந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவான இந்த படத்தை சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...விஸ்வநாத ராமமூர்த்தி, இளையராஜாவுடன் இசை புயல்..பார்த்திராத புகைப்படம் இதோ!

இந்நிலையில் இந்த படம் ஜூலை 29ஆம் தேதி வெளியாகியுள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்  மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இது குறித்த உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். முன்னதாக  உதயநிதி - சந்தானம் இருவரும் ஒரு கல் ஒரு கண்ணாடி, கதிர்வேலன் காதல், நண்பேண்டா உள்ளிட்ட மூன்று படங்களில் இணைந்து நடித்திருந்தனர். ஏற்கனவே கமலின் விக்ரம் உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படங்களை தன்வசம் வைத்துள்ள உதயநிதி தற்போது சந்தானம் படத்தையும் வாங்கியுள்ளார். மொத்தத்தில் பெரிய பட்ஜெட் முதல் சிறிய பட்ஜெட் வரை இனி உதயநிதி ஆட்சி தான்...

மேலும் செய்திகளுக்கு..."நடிகை கடத்தலுக்கும் திலீப்புக்கும் தொடர்பில்லை": முன்னாள் காவல் அதிகாரியின் வீடியோவால் பரபரப்பு!

அதோடு இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சான் நெட்வொர்க் பெற்றுள்ளது. தற்போது சந்தானத்தின் குலு குலு டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!
கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!