சோழர் புலியாக விக்ரம்..டீசரில் மிஸ்ஸான காட்சிகளை நாளை வெளியிடும் தயாரிப்பு நிறுவனம்!

By Kanmani PFirst Published Jul 12, 2022, 9:01 PM IST
Highlights

அருள்மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழனாக  ஜெயம் ரவி நடித்துள்ளார். இவர்தான் கதையின் நாயகனும் கூட .  இவரின் அண்ணனாக இருப்பதால் விக்ரமிற்கு மிக முக்கிய பங்கு இந்த படத்தில் உண்டு என்பது தெரிகிறது.

மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் நட்சத்திர பட்டாளம் உடன் களமிறங்க உள்ளது. இந்த படத்தில் இருந்து சமீபத்தில் டீசர் வெளியானது. ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு , விக்ரம் பிரபு, விக்ரம் உள்ளிட்டோர் சோழர் குலத்தை சேர்ந்தவர்களாக நடித்தனர். இவர்கள் குறித்தான போஸ்டர்களும் முன்னதாக வெளியானது.

மேலும் செய்திகளுக்கு..."வேஷ்டிக்கு முடிவில்லை "..காலில் மெட்டியணிந்து..மத்திய அழகை காட்டி இழுக்கும் விஜய் பட நாயகி!

சோழ அரசர்கள் குறித்து பிரபல எழுத்தாளர் கல்வி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை பின்பற்றியே இந்த படம் உருவாகிறது. இதற்கான வசனங்களை ஜெயமோகன் எழுது வருகிறார். ஒளிப்பதிவு ரவி வர்மா. மெட்ராஸ் டாக்கீஸ் லைக்கா இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வன்  செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பன்மொழிகளில் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் இருந்து விக்ரமின் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன்படி  சுந்தர சோழ ஆட்சியின் பட்டத்து இளவரசரும், வடபடைகளின் தளபதியுமான ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடித்துள்ளார். இவர் சுந்தர சோழனின் மூத்த மகன், அருள்மொழிவர்மன் மற்றும் குந்தவையின் மூத்த சகோதரர். இதில் குந்தவையாக த்ரிஷாவும் அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கிறார்கள் அருள்மொழிவர்மன் என்பவர் தான் ராஜராஜ சோழன்,   அருள்மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழனாக  ஜெயம் ரவி நடித்துள்ளார். இவர்தான் கதையின் நாயகனும் கூட .  இவரின் அண்ணனாக இருப்பதால் விக்ரமிற்கு மிக முக்கிய பங்கு இந்த படத்தில் உண்டு என்பது தெரிகிறது.

மேலும் செய்திகளுக்கு..."நடிகை கடத்தலுக்கும் திலீப்புக்கும் தொடர்பில்லை": முன்னாள் காவல் அதிகாரியின் வீடியோவால் பரபரப்பு!

குதிரை மீது கம்பீரமாக அமர்ந்திருந்த விக்ரமின் போஸ்டர் வைரலானது.இந்த நிலைகள் தற்போது மீண்டும் ஒரு போஸ்டரை பதிவிட்ட மெட்ராஸ் டாக்கீஸ். "பட்டத்து இளவரசனை தவற விட்டீர்களா?  நாளை மாலை 5 மணிக்கு உங்களுக்காக எங்களிடமிருந்து சிறப்பு  காட்சி உள்ளது" என குறிப்பிட்டுள்ளது. இதன்படி டீசரில் மிஸ்ஸான விக்ரமின் காட்சிகள் நாளை வெளியிடப்படலாம் என தெரிகிறது.

Missed the Crown Prince at the event?
We have something special for you!

Tomorrow at 5 PM releasing in theatres on 30th September. pic.twitter.com/6CI9mJr4Uz

— Madras Talkies (@MadrasTalkies_)

மேலும் செய்திகளுக்கு...விஸ்வநாத ராமமூர்த்தி, இளையராஜாவுடன் இசை புயல்..பார்த்திராத புகைப்படம் இதோ!

இதற்கிடையே திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் சமீபத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் இவர் கலந்து கொள்ளவில்லை. சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பியுள்ள  நேற்று நடைபெற்ற கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மாஸ் காட்டினார். இந்நிலைகள் விக்ரமின் போஸ்டர் அல்லது காட்சி வெளியாவது குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்

click me!