"நடிகை கடத்தலுக்கும் திலீப்புக்கும் தொடர்பில்லை": முன்னாள் காவல் அதிகாரியின் வீடியோவால் பரபரப்பு!

Published : Jul 12, 2022, 07:22 PM ISTUpdated : Jul 12, 2022, 07:28 PM IST
"நடிகை கடத்தலுக்கும் திலீப்புக்கும் தொடர்பில்லை": முன்னாள் காவல் அதிகாரியின்  வீடியோவால் பரபரப்பு!

சுருக்கம்

இந்நிலைகள் ஓய்வு பெற்ற கேரள முன்னால் காவல்துறை அதிகாரி ஸ்ரீலேகா என்பவர் தனது youtube சேனலில் திலீப் மீதான குற்றச்சாற்று 100% தவறானது என கூறியுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு நடிகை கடத்தல் சம்பவம் கேரளா சினிமா உலகை உலுக்கியது. படப்பிடிப்பிலிருந்து வீடு திரும்பிய நடிகையை திடீரென காணவில்லை என போலீசில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். பின்னர் 5 பேர் கொண்ட கும்பல் நடிகையை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது.

பாலியல்  சித்திரவதை செய்ததாக அந்த நடிகை புகார் அளித்திருந்தார். இதையடுத்து அந்த 5 பெரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த முக்கிய புள்ளிகளும் பிடிபட்டனர். இவர்களில் முதல் குற்றவாளியாக நடிகர் திலீப் மற்றும் வரத்து இரண்டாவது மனைவி, சகோதரர் உள்ளிட்டோர் இணைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகளுக்கு...Ajith Kumar in Paris : பாரிசில் அஜித்.. வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்!

இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.  நடிகையை  சித்ரவதை செய்யும் வீடியோவை தனது செல்போனில் வைத்திருந்ததை அடுத்து அவர் மீதான விசாரணை தீவிர படுத்தப்பட்டது கைது செய்யப்பட்டார். அதோடு நாயகி நடிகையை கடத்தி சென்றவர்களுடன் திலீப் பேசிய whatsapp அரட்டையும் வெளியானது. திலீப்பின் மனைவியான மஞ்சு வாரியர் நடிகை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து  தன் முன்னாள் கணவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முயற்சித்து வருகிறார். 

மேலும் செய்திகளுக்கு...Vikram's Cobra Songs : வெளியானாது விக்ரமின் கோப்ரா’ பட பாடல்கள்..லிங்க் இதோ!

இந்நிலைகள் ஓய்வு பெற்ற கேரள முன்னால் காவல்துறை அதிகாரி ஸ்ரீலேகா என்பவர் தனது youtube சேனலில் திலீப் மீதான குற்றச்சாற்று 100% தவறானது என கூறியுள்ளார். அந்த வீடியோவில் நடிகர் நிரபராதி என கூறியுள்ள ஸ்ரீலேகா,  குற்றவாளிகளாக இருக்கும் ஐந்து முதல் ஆறு பேர் திலீப்பை பின் தொடராமல் இருந்திருந்தால் இந்நேரம் காவல்துறையினால் பிடிப்பட்டிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

விசாரணை போது அவர் சந்தேகம் எழுப்பிய போதெல்லாம் அவரது மூத்த அதிகாரிகள் அமைதியாக இருந்ததாகவும் அவருக்கு எதிராக பெரும்பாலான ஆதாரங்கள் பல்சர் சுனிலால் புனையப்பட்டவை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். சுனில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவன் அவர் சிறையில் இருந்தபோது நடிகரின் மொபைலை பாதுகாக்க வைக்க  உதவியதாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..."வேஷ்டிக்கு முடிவில்லை "..காலில் மெட்டியணிந்து..மத்திய அழகை காட்டி இழுக்கும் விஜய் பட நாயகி!

மேலும் காவல்துறை மீது தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும், அவர்கள் தவறு செய்திருந்தால், அதை ஏன் அவர்களால் ஒப்புக்கொள்ள முடியாது? ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறார்கள்?  என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ வைரலாக பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில், ஸ்ரீலேகாவுக்கும் நடிகர் திலீப்புக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் அரட்டை வெளியாகியுள்ளது. தனியார் செய்தி தளம் வெளியிட்ட தகவலின் படி  திலீப்புக்கும் ஸ்ரீலேகாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளனர் என்பதற்கு சாட்சியாக  மே 23 முதல் ஜூலை 1, 2021 வரையிலான அரட்டையை  வெளியிட்டுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

இவ்வளவு நடந்தும் இன்னும் டிராமாவா: நான் மருமகள் தானே மன்னிக்க கூடாதா: கதறிய தங்கமயில்!
அடுத்த 1000 கோடி வசூலுக்கு ரெடியான ஷாருக்கான்... பட்டாசாய் வந்த ‘பதான் 2’ அப்டேட்