பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணத்தை அவர் கூறி இருக்கிறார்.
பைக் ஓட்டும் வீடியோக்களை யூடியூப்பில் பதிவிட்டு அதன் மூலம் சம்பாதித்து வருபவர் டிடிஎப் வாசன். இவருக்கு யூடியூப்பில் 30 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். பெரும்பாலும் 2கே கிட்ஸ் தான் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்களை தவறாக வழிநடத்தும் வகையில் பைக்கில் சாகசம் செய்து வீடியோ வெளியிடுவதாக டிடிஎப் வாசன் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தன. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தார் வாசன்.
இதனிடையே கடந்த சனிக்கிழமை மஹாராஸ்ட்ராவுக்கு தன்னுடைய நண்பன் அஜீஸ் உடன் சேர்ந்து பைக் ரைடு கிளம்பி உள்ளார் வாசன். அப்போது காஞ்சிபுரம் அருகே சென்றபோது பைக்கில் வீலிங் செய்ய முயன்றிருக்கிறார் வாசன், அப்போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி பைக் ஒருபுறமும், இவர் ஒருபுறமும் தூக்கிவீசப்பட்டனர். இதுகுறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்... செல்லும் இடமெல்லாம் சர்ச்சை... யார் இந்த TTF வாசன்? சப் இன்ஸ்பெக்டரின் மகன் யூடியூபர் ஆனது எப்படி?
இதையடுத்து இந்த விபத்தில் வாசனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் ஓட்டி வந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஹாயாபுசா பைக்கும் சுக்குறூறாக உடைந்தது. இதையடுத்து டிடிஎப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீசார் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது மற்றும் பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது
pic.twitter.com/pqpFeY9EFc
இந்த நிலையில் இன்று காலை டிடிஎப் வாசனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரின் வாகன் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைதான பின்னர் விபத்துக்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார் வாசன். அதன்படி, இது தெரியாம நடந்த ஒரு சின்ன விபத்து தான் என கூறிய வாசன், ஸ்லிப் ஆகி கீழே விழுந்துவிட்டதாக கூறினார்.
ஸ்டண்ட் பண்ணும்போது கீழே விழுந்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, தான் ஸ்டண்ட் பண்ணும் போது கீழே விழவில்லை என்றும், ஸ்லிப் ஆகி விழும்போது அதுவாகவே வண்டி தூக்கிடுச்சு என கூறினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் வண்டி அதுவாவே தூக்கிடுச்சா எப்புட்ரா என ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... வீலிங் செய்து விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசனை கைது செய்தது காஞ்சிபுரம் காவல்துறை