இரண்டே வருடம்.. சினிமா கனவை முடக்கி போட்ட விபத்து! 30 வருட போராட்டதிற்கு பின் உயிரிழந்தார் நடிகர் பாபு!

By manimegalai a  |  First Published Sep 19, 2023, 12:27 PM IST

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'என் உயிர் தோழன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, நான்கே படத்தில், தன்னுடைய வாழ்க்கையை இழந்த.. நடிகர் பாபு நேற்று இரவு உடல் நலக்குறைவால் காலமானார்.
 


தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் அனைவருக்குமே ரசிகர்கள் மத்தியில் எடுத்த எடுப்பில் வரவேற்பு கிடைத்து விடுவதில்லை. ஆனால் ஒரு சில நடிகர்கள், தங்களின் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதை மிக விரைவாக கவர்ந்து விடுகின்றனர். அந்த வகையில், இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'என் உயிர் தோழன்' என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு.

இவருடைய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 1990 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை தொடர்ந்து தொடர்ந்து, ஒரே வருடத்தில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்தார் பாபு அந்த வகையில் இவர் நடித்த, பெரும்புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர்களில் ஒருவர்தான் பாபு.

Latest Videos

தற்கொலைக்கு முன்... விஜய் ஆண்டனி மகள் யாருடன் போனில் பேசினார்? போலீசார் தீவிர விசாரணை

இவர் தன்னுடைய ஐந்தாவது படமான 'மனசார வாழ்த்துங்களேன்' என்கிற படத்தில், சண்டைக் காட்சி ஒன்றில் நடித்தார். மிகவும் ரிஸ்க்கான காட்சி என்பதால், டூப் போட்டு அந்த காட்சியை படமாக்கி கொள்ளலாம் என படக்குழுவினர் கூறிய போதும், நானே நடித்தார் அது மிகவும் தத்ரூபமாக இருக்கும் என அந்த காட்சியில் பாபுவே நடித்தார். மாடியில் இருந்து விழும் காட்சியில், தவறான இடத்தில் அவர் குதித்தால், பாபுவின் முதுகெலும்பு உடைந்தது. அதனை சரிசெய்ய பல ஆபரேஷன் செய்த போதும் அவரின் உயிரை காப்பாற்ற முடிந்ததே தவிர, அவரை எழுந்து நடக்கவைக்க முடியவில்லை.

” என் வலிமைக்கு காரணமான சக்தி..” தனது மகள் மீரா குறித்து விஜய் ஆண்டனி மனைவியின் பழைய ட்வீட் வைரல்..

இந்த விபத்து இவரை திரை கனவை மட்டும் அல்ல, வாழ்க்கையையும் புரட்டி போட்டது. கடைசி வரை எழுந்து கூட நிற்க முடியாமல் படுத்த படுக்கையிலேயே இருந்த நடிகர் பாபுவை, சமீபத்தில் கூட இவரை திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குனரும், பாபுவின் உயிர் நண்பனுமான பாரதிராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வந்தார். இந்நிலையில்  இவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்படவே, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சைகள் அளித்தபோதும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். சுமார் 30 வருடங்களுக்கு மேலாக படுத்த படுக்கையிலே இருந்த பாபு, உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

click me!