Rithvik new movie: யூடியூப் பிரபலம் குட்டி ரித்விக்குக்கு அடித்த ஜாக்பார்ட்..! முதல் படமே யாருடன் தெரியுமா?

Published : Dec 22, 2021, 05:55 PM IST
Rithvik new movie: யூடியூப் பிரபலம் குட்டி ரித்விக்குக்கு அடித்த ஜாக்பார்ட்..! முதல் படமே யாருடன் தெரியுமா?

சுருக்கம்

யூடியூப் மூலம் பிரபலமான, ரித்விக் தற்போது நடிகை  நயன்தாரா நடிக்கும் படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

யூடியூப் மூலம் பிரபலமான, ரித்விக் தற்போது நடிகை  நயன்தாரா நடிக்கும் படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிப்பு திறமையை நிரூபிக்க, புரோடக்க்ஷன் கம்பெனி ஏறி, இயக்குனர்களை சந்தித்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடும் காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போதெல்லாம் திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்ற, தங்களுடைய நடிப்பு திறமைகளை பலர், யூடியூப், டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் மூலம் வீடியோ வெளியிட்டு நிரூபித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்: Raashii Khanna: ஜாக்கெட் போடாமல் சேலை கட்டுவது பழசு! தொடையை காட்டியபடி புடவையில் தூள் கிளப்பும் ராஷி கண்ணா!

 

இப்படி வெளியிடப்படும் வீடியோக்களின் மூலம், பெரிய பெரிய இயக்குனர்களின் கவனத்தை கூட ஈர்த்து திரைப்பட வாய்ப்புகளை அசால்டாக கைப்பற்றி வருகின்றனர் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை.

அந்தவகையில் டிக்டாக் மூலமும், யூடியூப் மூலமும் பிரபலமான பலர் இன்று திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது யூடியுப் மூலம் மிகவும் பிரபலமான குட்டி ரித்விக், தற்போது திரைப்படத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்:அடேங்கப்பா... அந்த இடத்தில் எவ்வளவு பெரிய டாட்டூ! வாளமீன் நடிகையின் வெரைட்டி கவர்ச்சியில் வெலவெலத்த இளசுகள்!

 

 ஐந்து வயதே ஆகும் ரித்விக் சிறுவனாக இருந்தாலும்... ஆண், பெண், வயது முதிர்ந்தவர், இளைஞர், என விதவிதமான கெட்டப்புகளில் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்தி பலரது கவனத்தையும் ஈர்த்தவர். இவருடைய திறமைக்கு போத்தீஸ் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை இதைத்தொடர்ந்து தற்போது திரைப்படத்திலும் ரித்விக் அறிமுகமாக உள்ளார்.

மேலும் செய்திகள்: 2021 Comedy Actors Death: தீராத சோகம்..! 2021 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகம் இழந்த 6 காமெடி நடிகர்கள் பட்டியல் இதோ

கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் 'oxygen' படத்தில் தான் ரித்விக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. முதல் படமே நயன்தாராவின் படமாக அமைந்தது இவருக்கு அடித்த ஜாக்பார்ட் என்று தான் சொல்லவேண்டும். மேலும் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை ரித்விக்குக்கு தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!