Valimai Update : கிட்டார் இல்லாம தீம் மியூசிக்!! சவால்விட்ட அஜித்... சாதித்து காட்டிய யுவன் - வைரலாகும் வீடியோ

Published : Dec 22, 2021, 04:30 PM IST
Valimai Update : கிட்டார் இல்லாம தீம் மியூசிக்!! சவால்விட்ட அஜித்... சாதித்து காட்டிய யுவன் - வைரலாகும் வீடியோ

சுருக்கம்

சர்ப்ரைஸ் அப்டேட்டாக வலிமை (Valimai) படத்தின் தீம் மியூசிக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. விசில் ஒலியின் மூலம் இந்த தீம் மியூசிக்கை யுவன் உருவாக்கி உள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே இப்படடத்தின் டீசர், பாடல்கள் மற்றும் மேக்கிங் வீடியோ ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சர்ப்ரைஸ் அப்டேட்டாக வலிமை படத்தின் தீம் மியூசிக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. விசில் ஒலியின் மூலம் இந்த தீம் மியூசிக்கை யுவன் உருவாக்கி உள்ளார். 

பில்லா, பில்லா-2, மங்காத்தா ஆகிய படங்களுக்கு கிட்டார் வைத்து தீம் மியூசிக் செய்து அசத்திய யுவனிடம், வலிமை படம் தொடங்கிய சமயத்தில் நடிகர் அஜித் ‘நிறைய தீம் மியூசிக் கிட்டார் வச்சு பண்ணிட்டோம். அதனால் ‘வலிமை’ படத்திற்கு கிட்டார் இன்றி தீம் மியூசிக் அமைக்க முயற்சி செய்யுமாறு யுவனிடம் அறிவுறுத்தி இருந்தார்.

அஜித் சொன்னதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, இப்படத்தில் கிட்டார் பயன்படுத்தாமல் தீம் மியூசிக்கை உருவாக்கி இருப்பதாக யுவன் சில பேட்டிகளில் கூறி இருந்தார். தற்போது சொன்னபடியே விசில் தீம் மியூசிக்கில் (Whistle Theme music) அதனை சாதித்து காட்டி உள்ளார் யுவன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Top 10 Movies : புஷ்பா 2 முதல் டாக்ஸிக் வரை... முதல் நாள் அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள்!
Bigg Boss 10 : லீக்கான பிக் பாஸ் சீசன் 10 போட்டியாளர்கள் லிஸ்ட்... இத்தனை விஜய் டிவி பிரபலங்கள் இருக்காங்களா?