
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கப்பட்டதை எட்டியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் லக்ஜுரி பட்ஜெட் (Luxury Budget) பொருட்களை பெற ஒரு டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ஃபிரீஸ் டாஸ்க் (Freeze Task) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டாஸ்கின் போது உள்ளே இருக்கு போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவர். அந்த வகையில் நேற்று சிபி மற்றும் அக்ஷரா ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.
இந்நிலையில், இன்று ராஜுவின் (Raju) மனைவி மற்றும் அம்மா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வது போன்ற காட்சிகள் முதல் புரோமோவில் காட்டப்பட்டிருந்தன. இரண்டாவது புரோமோவில் நிரூப்பின் (Niroop) தந்தை உள்ளே சென்றதை காட்டி இருந்தனர். தற்போது வெளியாகி இருக்கும் 3-வது புரோமோவில் நடிகை யாஷிகா பிக்பாஸ் வீட்டிற்குள் அமைக்கப்பட்ட ஒரு கண்ணாடி அறையில் நின்றவாறு போட்டியாளர்களுடன் கலந்துரையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
நடிகை யாஷிகா (Yashika) தனது முன்னாள் காதலரான நிரூப்பை சந்திக்க சர்ப்ரைஸாக சென்றுள்ளாராம். யாஷிகாவின் வருகையை சற்றும் எதிர்பாராத நிரூப், இன்ப அதிர்ச்சி அடைந்து அவரிடம் உரையாடுவது போன்ற காட்சிகளும் புரோமோவில் இடம்பெற்று உள்ளன. நடிகை யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.