யங் தளபதி... வியக்கும் ரசிகர்கள்..!

 
Published : Jan 28, 2018, 02:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
யங் தளபதி... வியக்கும் ரசிகர்கள்..!

சுருக்கம்

young vijay photo spread viral

விஜய் 62வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார்.இந்த படம் பிரம்மாண்டனமான முறையில் உருவாகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கான ஷுட்டிங் அண்மையில் தொடங்கியுள்ளது.இதில் விஜய்யின் நியூ லுக்  சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மூன்றாவது முறையாக இணையும் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் ,விஜய்யை வைத்து மூன்றாவது முறையாக இயக்குகிறார். இவர் விஜய்யுடன் இணைந்து முதலில் கத்தி படத்தையும், அடுத்து துப்பாக்கி படத்தையும் இயக்கினார். இவ்விரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்திருக்கிறார் முருகதாஸ். இதனால் இந்த படமும் மற்ற இரண்டு படங்கள் மாதிரி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.மேலும் இந்த படத்திலும் கத்தி படம் போலவே விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையை குறித்தே பேசப்படுவதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம்

விஜய் 62 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பைரவா படத்திற்கு இரண்டாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

விறுவிறுப்பாக நடைபெறும் ஷூட்டிங்

இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன்  வசனம் எழுதுகிறார்.இதற்கான ஷூட்டிங் சென்னை முட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வருகிறது.மேலும் இப்படத்திற்கான ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரனும், ஸ்ரீதர் பிரசாத் படாத தொகுப்பாளராகவும் பணியாற்றுக்கின்றனர்.

விரைவில் டைட்டில்

ஜனவரி 19 ம் தேதி பூஜையுடன் தொடங்கிய இப்படத்தில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் விஜய் 62 படத்தை தீபாவளியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.இதற்கான டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் ரசிகர்கள் உரசாகமடைந்துள்ளனர்.

நியூ யங் லுக்

விஜய் 62 படத்திற்காக கிளாசியான தோற்றத்தில் போட்டோ ஷூட் எடுத்திருந்தார் விஜய், அது இணையத்தில் வைரலானது.அதன் பிறகு, முதல்நாள் ஷூட்டிங்கில் போது விஜயின்  காதில் கடுக்கன் இருந்ததை பார்த்த ரசிகர்கள் தளபதியின் லுக்கை பாராட்டி வந்தனர். இந்நிலையில், தற்போது விஜயின் நியூ லுக் ஒரு வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த தளபதி ரசிகர்கள் இளமையான தளபதியை பார்ப்பது போல் உள்ளது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025 ஆம் ஆண்டிற்கான டாப் 5 சிறந்த இயக்குனர்களின் பட்டியல்: First அண்ட் Last யார் தெரியுமா?
அஜித்தோடு மாப்பிள்ளை சார் சபரீசன்; சூடு வச்ச மாதிரி ஒரு கூட்டமே கதறுமே.? சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நக்கல்