
விஜயேந்திரரை நாகரீகம் தெரியாதவர் என நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
நூல் வெளியீட்டு விழா
எச்.ராஜாவின் தந்தையான மறைந்த பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ் சமஸ்கிருதம் நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
தேசிய கீதத்துக்கு மரியாதை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதையா?
அதில் ஆளுநர் உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.இதில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரரும், கலந்து கொண்டார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதற்கு எழுந்து மரியாதை செய்த விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஆளுநர் உள்பட அனைத்து தலைவர்களும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.விஜயேந்திரர் மட்டும் ஏன் எழுந்திருக்கவில்லை என எதிர்ப்புகள் கிளம்பியது.
தியானம்
இதற்கு பல கண்டனங்கள் எழுந்ததையடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் தியானத்தில் ஈடுபட்டதால், எழுந்திருக்கவில்லை என காஞ்சி மடம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
போராட்டங்கள்
இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் முதல் நடிகர்கள், சாமானியர்கள் வரை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜயேந்திரரை கைது செய்ய வேண்டும் என பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
நாகரிகம் தெரியாதவர்
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்த போது, எழுந்து நின்று மரியாதை செய்ய தெரியாத விஜயேந்திரருக்கு, நாகரிகம் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.