
மெர்சல்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான படம் மெர்சல்.இதில் விஜய் அப்பா, அண்ணன், தம்பி என மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.அப்பா விஜய்க்கு ஜோடியாக, நித்யா மேனனும், அண்ணன் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவும், தம்பி விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் நடித்திருந்தனர். இதில் வடிவேலு காமெடி பண்ணாமல், குணச்சித்திர நடிகராக நடித்திருந்தார்.
ஜிஎஸ்டி வசனம்
இந்த படத்தில் ஆளும் மத்திய அரசின் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் மக்கள் அவதிப்பட்டதை சுட்டிக்காட்டி, நடிகர் விஜய் வசனம் பேசியிருப்பார்.இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.இதனால் இந்த வசனங்களை நீக்க வேண்டும் இல்லையென்றால், இப்படத்தை தடை செய்ய வேண்டும் என பல போராட்டங்கள் நடைபெற்றன.
எச்.ராஜாவால் விளம்பரம்
ஒரு கட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் விஜய்க்கு மதச்சாயம் பூசினார். ஆனால் பல தடைகளையும் தாண்டி, இந்த படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.
அரசியல் கட்சியினர் இப்படி செய்தததே படத்திற்கு மாபெரும் விளம்பரமாக அமைந்ததாக கூறப்பட்டது.
இணையத்தில் சாதனை
மேலும் மெர்சல் வெளியாவதற்கு முன்பே இப்படம் இணையதளத்தில் பல சாதனைகளை புரிந்தது. ட்விட்டரில் மெர்சல் எமோஜி ட்ரெண்ட் ஆனது. மேலும் இப்படத்தில் வெளியான எல்லா பாடல்களும் ஹிட் ஆனது. குறிப்பாக, சொல்லவேண்டுமென்றால் "ஆளப்போறான் தமிழன்"பாடல் "நீதானே நீதானே"பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
மெர்சலுக்கு கிடைத்த பெருமை
பல சாதனைகளை புரிந்த மெர்சலுக்கு தற்போது மீண்டும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. நார்வே நாட்டில் நடந்து வரும் தமிழ் திரைப்படங்களுக்கான விருது விழாவில் விருது கிடைத்துள்ளது. இதில் மெர்சல் படத்தில் விஜய்க்கு ஓப்பனிங் சாங்காக அமைந்த "ஆளப்போறான் போறான் தமிழன்" பாடலுக்காக பாடலாசிரியர் விவேக்கு விருது கிடைத்துள்ளது. மேலும் "நீதானே" பாடலுக்காக தேன் குரலுக்கு சொந்தக்காரரான, ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகிக்கான விருது கிடைத்துள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.