ஆஸ்கர் விருது வென்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆடியது போலவே பர்ஃபெட்டாக டான்ஸ் ஆடியுள்ள இளம் பெண்ணின் வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'RRR'. 450 கோடி பட்ஜெட்டில் சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் சீதா ராமராஜு ஆகியோரின் வாழ்க்கையை மையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், உலக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த படங்களில் ஒன்றாக மாறியது. இந்த படத்தில் ஹீரோவாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தனர். மேலும் உலக அளவில் சுமார் 1000 கோடி வசூல் கிளப்பில் இணைந்து சாதனை படைத்தது இப்படம்.
RRR படத்திற்கு உயிரோட்டமான இசையமைத்திருந்தார் கீரவாணி. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற, நாட்டு நாட்டு பாடல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி முதல் நார்வே நடனக் குழுவான குயிக் ஸ்டைல் வரை, அனைவரையும் கவர்ந்த ஒரு பாடலாக அமைந்தது. அதிலும் ஆஸ்கர் விருதுக்கு பின்னர், இந்த பாடலுக்கு... சமூக வலைத்தளத்தில் சிறியவர்கள், இளைஞர்கள், பிரபலங்கள் என அனைவருமே ரீல்ஸ் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
undefined
14 வயத்தில் மகள்... திருமணம் ஆகி 17 வருடத்திற்கு பின் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவான நடிகர் 'பக்ரு'!
அந்த வகையில் இளம் பெண் ஒருவர்... அச்சு அசல் அப்படத்தில் இடம்பெற்றது போலவே நடனம் ஆடி அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை ஹர்னித் கவுர் சோதி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த பாடலுக்கு "நாட்டு நாட்டு பீவர் " என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த பெண் வெள்ளை நிற டீ ஷர்ட் அணிந்து, கருப்பு பேன்ட்டுடன்... பிரேஸ்கள் மற்றும் ஸ்னீக்கர்கள் அணிந்து, நாட்டு நாட்டு இசைக்கு உற்சாகமான தன்னுடைய நடன திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
கிழிந்த பேன்டில்... துளியும் மேக்கப் போடாமல் அழகில் மயக்கும் பிரியங்கா மோகன்! கியூட் போட்டோ ஷூட்!
மேலும், அவரின் இந்த ஹூக் ஸ்டெப்ஸ் டான்ஸ் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கச்சிதமாக பொருந்துகிறது. என இந்த இளம்பெண்ணுக்கு தங்களின் வாழ்த்துக்களை கூறி, லைக்குகளை குவித்து வருகிறார்கள். தற்போது வைரலாகி வரும் அந்த டான்ஸ் வீடியோ இதோ...