2024 - சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஹிட் கொடுத்த 5 படங்கள்!

By manimegalai a  |  First Published Dec 18, 2024, 9:07 PM IST

இந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூல் ரீதியாகவும் - விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்ற 5 படங்கள் பற்றி பார்க்கலாம்.
 


ஒவ்வொரு வருடமும் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் 450 ஸ்மால் பட்ஜெட் படங்கள் தான் 50 படங்கள் மட்டுமே 50 கோடிக்கும் மேல் செலவு செய்து எடுக்கப்படுகிறது. பிக்பட்ஜெட் படங்களும், பெரிய ஸ்டார்களின் படங்கள் ரசிகர்களை எளிதாக சென்றடைந்தாலும், இதை தொடர்ந்து வெளியாகும் 450 சிறு பட்ஜெட் படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கின்றன. அப்படி சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரசிகர்கள் மனதை கவர்ந்த 5 திரைப்படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

லவ்வர்:

Tap to resize

Latest Videos

undefined

காமெடியால் உயர்ந்து; குடியால் மாண்ட நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் லவ்வர். ஜெய்பீம் பட நடிகர் மணிகண்டன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை, பிரபு ராம் வியாஸ் இயக்கியிருந்தார். ஒருவிதமான டாக்ஸிக் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், காதலர்களுக்குள் வரும் பொறாமை, கோவம், ஆதங்கம், போன்றவற்றை அழகாக காட்சி படுத்தி இருந்தார் இயக்குனர். பல காதலர்களின் பழைய நினைவுகளை அசைபோட வைத்த இந்த திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 40 கோடி வரை வசூல் செய்தது.

வாழை:

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் வாழை. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் தன்னுடைய சிறுவயதில் தான் சந்தித்த பிரச்சனைகளை மற்றும் வலி, வேதனைகளை இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியிருந்தார். இப்படம் திரையரங்கில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றதோடு பல பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்தது. சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 60 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

புஷ்பா 2 : கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச்சாவு; மீண்டும் கைதாகிறாரா அல்லு அர்ஜூன்?

லப்பர் பந்து:

ஹரிஷ் கல்யாண் மற்றும் தினேஷ் நடிப்பில் வெளியான எதார்த்தமான ஸ்போட்ஸ் ட்ராமா திரைப்படம் 'லப்பர் பந்து'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, இந்த படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணத்து ஜோடியாக சஞ்சனா நடிக்க, சுவாசிக்கா தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் கீதா கைலாசம், தேவதர்ஷினி, ஆகியோர் நடித்திருந்தனர். 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சுமார் 45 கோடி வரை வசூல் செய்தது.

'குட் பேட் அக்லீ' படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் - ஹீரோ பற்றி வெளியான தகவல்!

மகாராஜா:

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ரூ.20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை நித்திலன் சாமிநாதன் இயக்கி இருந்தார்.  இந்த படத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் கவர்ந்தார்.  ஒரு அப்பாவாக தன்னுடைய மகளுக்கு நடந்த அநீதிக்கு பழிவாங்க துடிக்கும் காட்சிகளுக்கு நடிப்பால் வலு சேர்த்தார். பிக் பாஸ் சாச்சனா தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தில் நட்டி நட்ராஜ், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி மணிகண்டன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் 110 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததை தொடர்ந்து, சீனாவிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சோபிதாவை திருமணம் செய்யும் முன் நாக சைதன்யா போட்ட முக்கிய கண்டீஷன்! என்ன தெரியுமா?

கொட்டுக்களி:

 கூழாங்கல் திரைப்படத்தை இயக்கிய பி எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி - அன்ன பென் நடிப்பில் வெளியான திரைப்படம் கொட்டுகாளி. இப்படம் உலக அளவில் பல விருதுகளை பெற்றது  வாங்கி குவித்தல் இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார் இப்படம் உலக அளவில் விருதுகளை பெற்றது. 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்ற திரைப்படமாக மாறியது.
 

click me!