
கே.ஜி.எஃப் 2 VS விஜய்யின் பீஸ்ட் போட்டியை பற்றி நடிகர் யாஷ் மேடையில் பேசியுள்ளது. ரசிகர்களின் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் 1 சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மெழிகளிலும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
KGF -2 VS பீஸ்ட்:
கே.ஜி.எஃப் 1 வெற்றியை தொடர்ந்து, கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி, வருகிற ஏப்ரல் 14-ந் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படமும் ஏப்ரல்-13 -ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக டோலிவுட் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது.
இதையொட்டி பீஸ்ட் படத்துக்கும் கேஜிஎஃப்-2 படத்துக்கும் இடையேதான் போட்டி என இணையம் முழுவதும், அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.
கே.ஜிஎஃப் 2 டிரைலர் வெளியீடு:
இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அதன்படி கே.ஜி.எஃப் 2 படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. மேலும் இதில் இடம்பெறும் 'மையால தொடர முடியாது’, உள்ளிட்ட வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலானது.
கே.ஜி.எஃப் 2 டிரைலர் வெளியீட்டு விழா:
இந்நிலையில், கே.ஜி.எஃப் 2 டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது.இவ்விழாவில் படக்குழுவினர், பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டனர். கேஜிஎஃப் படத்தின் ஹீரோ யாஷிடம் ஏப்ரல் 13ம் தேதி விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாவது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த யாஷ்,
''இது, கே.ஜி.எஃப் 2 VS விஜய்யின் பீஸ்ட் இல்லை. கே.ஜி.எஃப் 2 மற்றும் விஜய்யின் பீஸ்ட் என்று தான் பார்க்க வேண்டும். இது சினிமா..தேர்தல் இல்லை தேர்தலில் தான் ஒருவர் வெற்றிபெற்று மற்றொருவர் தோல்வியடைய வேண்டும். படத்தின், வெளியீடு தேதியை முடிவு செய்த போது ,பீஸ்ட் அந்த தேதியில் வெளியானது தெரியாது'' மேலும், விஜய் ஒரு பெரிய நடிகர். எனவே நானும் பீஸ் படத்தைப் பார்ப்பேன். என்படத்தையும் பார்ப்போம். எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம். என்று யாஷ் பேசியுள்ளார். இது விஜய் ரசிகர்களின் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.