Oscars 2022 : கோலாகலமாக தொடங்கியது 94-வது ஆஸ்கர் விருது விழா... 4 விருதுகளை தட்டித்தூக்கி கெத்து காட்டிய Dune

Ganesh A   | Asianet News
Published : Mar 28, 2022, 05:45 AM IST
Oscars 2022 : கோலாகலமாக தொடங்கியது 94-வது ஆஸ்கர் விருது விழா... 4 விருதுகளை தட்டித்தூக்கி கெத்து காட்டிய Dune

சுருக்கம்

Oscars 2022 : சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 4 பிரிவுகளில் டியூன் படத்துக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

94-வது ஆஸ்கர் விருது விழா

உலக அளவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதை வாங்க வேண்டும் என்பது, திரை துறையைச் சேர்ந்த ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் மிகப்பெரிய கனவு என்றே கூறலாம். ஆஸ்கர் விருது விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

உலகமே உற்றுநோக்கும் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருது விழாவை இந்த ஆண்டு 3 பெண் தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் , ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை. 

இதில் முதலில் ரெட் கார்பெட் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆஸ்கர் விருது விழாவில் கலந்துகொள்ள வந்த நட்சத்திரங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு பிரிவுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது.

டியூன் படத்துக்கு 4 விருதுகள்

அதன்படி டெனிஸ் விலேனுவே இயக்கிய டியூன் (Dune) திரைப்படம் இதுவரை 4 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தி உள்ளது. சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 4 பிரிவுகளில் இப்படத்துக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக பேட்ரிஸ் வெர்மெட்டெ (Patrice Vermette) மற்றும் சுசன்னா சிபோஸ் (Zsuzsanna Sipos) ஆகியோருக்கும், சிறந்த படத்தொகுப்புக்காக ஜோ வாக்கருக்கும் (Joe Walker), சிறந்த பின்னணி இசைக்காக ஹேன்ஸ் ஸிம்மருக்கும் (Hans Zimmer), சிறந்த ஒலிப்பதிவுக்காக மேக் ருத் (Mac Ruth), மார்க் மங்கினி (Mark Mangini), தியோ கிரீன் (Theo Green), டக் ஹெம்பில் (Doug Hemphill), மற்றும் ரான் பேர்லெட் (Ron Bartlett) ஆகியோருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... KGF 2 Trailer : ஆர்.ஆர்.ஆர் படத்தையே மிஞ்சும் பிரம்மாண்டம்... வைரலாகும் KGF 2 படத்தின் மாஸ் டிரைலர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சமந்தாவின் ஹனிமூன் பிளான்: ராஜ் உடன் ரொமான்டிக் டிரிப் எங்கே?
ஒரே ஆண்டில் 2 தோல்விகள் கொடுத்த பிரபாஸ்!