
கடந்த 2018 அம ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றி ரசிகர்கள் மனதில் அடுத்த பாகத்திற்கான விதையை பல ஆண்டுகளுக்கு முன்னரே விதைத்து விட்டது. ஏழை சிறுவனின் வாழ்க்கையை வன்முறை மாறும் அடிப்படை கதைக்களத்தை கொண்ட இந்த பாடத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த இரண்டாம் பாகம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உலகமெங்கும் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான இந்த படம் உலகம் முழுவதும் வசூலை வார்க்குவித்து வருகிறது. இந்த திரைப்படம் ரிலீசான வெறும் 7 நாட்களில் 715 கோடிகளை கடந்து வசூல் செய்து ஆர். ஆர். ஆர் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளியது.
மேலும் செய்திகளுக்கு...மீண்டும் நானும் ரவுடி...விஜய் சேதுபதியுடன் கைகோர்த்த ராதிகா சரத்குமார்..வெளியானது பர்ஸ்ட் லுக்
இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீணா டண்டன், பிரகாஷ் ராஜ், சரண், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தமிழ் ,தெலுங்கு,கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் வெற்றி கண்டுள்ளது. திரையரங்கில் மாஸ் காட்டி வரும் கே.ஜி.எஃப் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்டும் வெளியானது. நான்கு வாரங்களுக்கு பிறகு படம் ஓடிடி தளத்திற்கு வரும் என சொல்லப்படுகிறது. அதோடு மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்பும் சேர்ந்தே ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...திருமண நாளில் த்ரோபேக்....ஐஸ்வர்யா பச்சனின் மணநாள் தருணங்கள்..
துப்பாக்கி கலாசாரம், சண்டை சத்தம் என போர்க்களமாக இருந்தாலும் இந்த படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் யாஷ், இந்த படத்திற்காக யாஷ் ரூ. 25 முதல் 27 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரசிகருக்கு நன்றி சொல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார் யாஷ், அதில் கேஜிஎஃப் சிறுவன் குறித்த உணர்ச்சி பூர்வமாக குறிப்பிடும் யாஷ் மக்கள் தன் மீது பொழிந்த அன்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.