
பிரபல இயக்குனர் பேரரசு, தான் விஜய்க்காக 3 கதை தயாராக வைத்திருப்பதாகவும், அவரை கடந்த 2 வருஷமாக ஃபாலோ பண்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பீஸ்ட் திரைப்படம் தோல்வியா?
வளர்த்து வரும் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படம் அஜித்தின் வலிமை மற்றும் யாஷின் கேஜிஎஃப் 2 படத்தை விட அதிக வரவேற்பு கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.
நட்சத்திர பட்டாளங்கள்:
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஷான் டாம் சாக்கோ வில்லனாகவும் நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வசூல் விவரம்:
பான் இந்தியா படமாக தயாராகி உள்ள பீஸ்ட்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அனிருத் கவனிக்க, பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இருப்பினும், இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்க வில்லை. நெகடிவ் விமர்சனங்களை பெற்றதால் வசூல் விவரம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெளிவந்த, கேஜிஎப் 2 படம் தற்போது வசூல் சாதனைகள் படைத்து வருகிறது.
பீஸ்ட் படம் தோல்வி அடைய என்ன காரணம் என்று பல்வேறு, தரப்பினரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதிலும் சிலர் உங்களுக்கு சிவகாசி, திருப்பாச்சி போன்ற ஆக்ஷன் சென்டிமென்ட் கதைகள் செட் ஆகும் என்றும் அட்வைஸ் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க....Sakshi Agarwal: குட்டி டவுசரில் கன்னா பின்னா கவர்ச்சி காட்டும் சாக்ஷி அகர்வால்..! தொடை தெரிய குத்தவச்ச போஸ்..
பேரரசு பேட்டி:
இந்நிலையில், தற்போது 90ஸ் பிரபல இயக்குனர் பேரரசு அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், தான் விஜய்க்காக 3 கதை தயாராக வைத்திருப்பதாகவும், அவரை கடந்த 2 வருஷமாக ஃபாலோ பண்றேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அவர் நான் ரெடி என்றும், எனக்கு சிறிது காலம் இடைவெளி விழுந்து விட்டது.விஜய்க்கு தற்போது மார்க்கெட் வேற லெவல், பட்ஜெட் வேற லெவல் தற்போது அவர் கூப்பிட்ட உடன் படம் பண்ணலாம், என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.