அல்லு அர்ஜூனை பாராட்டி தள்ளிய அன்புமணி.. தமிழ் நடிகர்கள் இதனை செய்வார்களா..? திடீர் கோரிக்கை..

Published : Apr 21, 2022, 04:29 PM IST
அல்லு அர்ஜூனை பாராட்டி தள்ளிய அன்புமணி.. தமிழ் நடிகர்கள் இதனை செய்வார்களா..? திடீர் கோரிக்கை..

சுருக்கம்

புஷ்பா பட வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் டிரெண்டிங் ஆன நடிகர் அல்லு அர்ஜூனிடம், முன்னனி புகையிலை நிறுவனம் தங்களது விளம்பர படத்தில் நடிக்க அழைத்துள்ளனர். மேலும் அதற்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் புகையிலை விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜூன் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் இதுக்குறித்து பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில்,” புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசை காட்டப்பட்ட போதிலும், சமூகக் கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது.புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் மூலம் உந்தப்பட்டு தமது  ரசிகர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடும்  என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது.

நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்தால், அதைப் பார்த்து ரசிகர்கள் புகையிலைக்கு அடிமையாவார்கள் என்பதால் தான் அத்தகைய காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது முன்னணி நடிகர்களுக்கு கடிதம் எழுதினேன். புகையிலை நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து நடிகர்களும் அவர்களின் ரசிகர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி புகைக்கும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பராசக்தி சர்ச்சை பற்றி முதன்முறையாக பேசிய சிவகார்த்திகேயன் - என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
பிரதமர் மோடி உடன் பொங்கல் கொண்டாடிய பராசக்தி டீம்... டெல்லியில் நடந்த எதிர்பாரா மீட்டிங்..!