Manjummel Boys & World War : இவ்வாண்டு வெளியான படங்களில், எல்லா மொழி ரசிகர்களையும் ஈர்த்துள்ள ஒரு படமாக மாறியுள்ளது மஞ்சுமேல் பாய்ஸ் என்றால் அது மிகையல்ல.
ஆனால் இந்த மஞ்சுமெல் பாய்ஸ் படத்தினுள் ஒரு மாபெரும் விஷயம் ஒளிந்திருப்பதாகவும், அதுவே உலக போருக்கு காரணமாக அமைய வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் ஒரு Youtube பிரபலம். பின்வரும் கருத்துக்கள் அனைத்தும் அந்த Youtube பிரபலம், அவர் வெளியிட்ட வீடியோவில் பதிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சுமெல் பாய்ஸ் கதைக்களம் என்ன?
பள்ளி பருவத்தில் இருந்து ஒன்றாக பயின்ற வரும் சில நண்பர்கள், பெரியவர்களான பிறகு ஒரு சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். அதுவும் ஒரு பட்ஜெட் ட்ரிப், அதற்கு ஏற்றார் போல ஒரு சிறு வாகனத்தில், செலவு அதிகம் ஆகாத ஒரு இடத்திற்கு ஜாலியாக செல்கின்றனர். அங்கு வழக்கம் போல நண்பர்கள் செய்யும் சேட்டைகள் எல்லாவற்றையும் செய்கின்றனர்.
இறுதியில் ஒரு நண்பர் குணா குகைக்குள் விழுந்துவிட, நண்பனை காக்க பல முயற்சிகளை மேற்கொண்டு, இறுதியில் ஒருவர் தானே அந்த குழிக்குள் இறங்கி அந்த நண்பரை மீட்டு வருகின்றனர். இதுதான் மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் கதை. சரி இதில் என்னப்பா உலக போருக்கு காரணம் இருக்கப்போகிறது என்று பார்த்தால், அங்கு தான் அந்த பிரபல Youtuber ஒரு கருத்தை வெளியிடுகிறார்.
YouTuber பகிர்ந்த தகவல்
இந்த படத்தில் சில நண்பர்கள் ஒன்றாக இணைந்து சந்தோஷமாக நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் தற்பொழுது மாறிவரும் இந்த காலத்தில் இப்படி சில நண்பர்கள் ஒன்றாக இணைந்து சந்தோஷமாக தங்கள் நேரத்தை கொண்டாடினால், அவர்களை "ஓரினச் சேர்க்கையாளர்" என்று நம் மனதில் ஒரு எண்ணம் தோன்றும் அளவிற்கு காலம் மாறி வருவதாக அவர் கூறியிருக்கிறார்.
அதாவது மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நாம் அதிகம் ரசித்தது அந்த ஆண் நண்பர்களின் நட்பின் ஆழத்தை தான். ஆனால் இப்போதெல்லாம் இரு ஆண்கள் ஒன்றாக இணைந்து கைகோர்த்துக்கொண்டு நடந்தாலே அவர்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று பிறர் என்னும் அளவிற்கு என்ன ஓட்டங்கள் தற்பொழுது மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன, பல நாடுகளும் இதை ஆதரிக்கின்றன என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
அண்மையில் பிரான்ஸ் நாட்டில் பிரதமராக ஒரு ஓரினச் சேர்க்கையாளர் அறிவிக்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டி, மேலை நாடுகள் பல இத்தகைய கலாச்சாரத்தை வளர்க்கவும், உலக அளவில் கணிசமாக மக்கள் தொகையை குறைக்கவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மஞ்சுமெல் பாய்ஸ் போல கைகளை கோர்த்துக்கொண்டு நண்பர்கள் நடந்து செல்வதை உணர்வுபூர்வமாக ரசிக்கும் எண்ணம் நம் தலைமுறையோடு அழிந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். இவற்றை எதிர்த்து தான் ரஷ்ய பிரதமர் புதின் அவர்கள் சில வாரங்களுக்கு முன்பு, சுமார் ஒரு மணி நேரம் பேசி வெளியிட்ட காணொளியில் உலகத்தின் "Biological" அமைப்பை மாற்ற முயற்சிகள் நடக்கின்றது, ஆகவே இவற்றை எதிர்த்து எந்த நாடாக இருந்தாலும் போராட தான் தயாராக இருப்பதாக, அவர் கூறியதாக ஒரு தகவலையும் அந்த Youtuber தனது பதிவில் கூறியுள்ளார்.
இனி மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை ஒரு 20 வருடங்கள் கழித்து எடுக்கும் பொழுது, பத்து நண்பர்களுக்கு பதிலாக பத்து ஓரின சேர்க்கையாளர்கள் ஒன்றாக ஓர் சுற்றுலா சென்று வந்ததாக படம் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. உலக அளவில் ஆண்கள் மற்றும் பெண்களை அதில் இருக்கும் அபாயத்தை உணர்த்தாமல் ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றி வருகிறார்கள்.
அதற்கு மேற்கத்திய கலாச்சாரம் உதவி வருகிறது, இதனால் தான் புதின் கோபப்பட்டுள்ளார், ஆகையால் உலகப்போர் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.