தளபதி விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே, சுமார் 10 லட்சம் ஃபாலோவர்ஸ் அவரை பின்தொடர துவங்கியுள்ளனர். மேலும் அடுத்தடுத்து அவரை ஃபாலோ பண்ணும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தமிழ் சினிமாவில், கிளாஸ் ஆன படங்களை தேர்வு செய்து, படு மாஸான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் தளபதி விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் இவர், எது செய்தாலும் அது அவருடைய ரசிகர்கள் மத்தியில், மிகவும் பரபரப்பாக பார்க்கப்படுவதும்... பேசப்படுவதும்.. வழக்கம் தான். அந்த வகையில், இதுவரை twitter பக்கத்தில் மட்டுமே இருந்த விஜய், தற்போது அதிரடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்து ரசிகர்களுக்கும், பிரபலங்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தளபதி விஜய், இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே இவரை 10 லட்சம் பேர் ஃபாலோ செய்ய துவங்கினர். மேலும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க ... ஃபாலோவர்ஸ் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதே போல் விஜய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லியோ பட கெட்டப்பில் வெளியிட்டுள்ள மாஸ் புகைப்படமும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை விஜய்யின் ரசிகர்கள் #ThalapathyOnINSTAGRAM என்கிற ஹேஷ்டேக் மூலம், சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
அதே போல் ரசிகர்கள் பலரும், தளபதி விஜய்யிடம் இன்ஸ்டாகிராம் லைவ்வில் வரவேண்டும் என கோரிக்கை வைத்து வருவதோடு, சிலர் லியோ படம் குறித்த அப்டேட்களையும் கேட்க துவங்கி விட்டனர். விஜய்யின் இந்த அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை, கல்யாணி பிரியதர்ஷன், மஞ்சுமா மோகன், ஹன்சிகா, கவின், இயக்குனர் விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல பிரபலங்களும் பின்தொடந்து வருகிறார்கள்.
சமீபத்தில் கூட, விஜய் அங்கிள் தன்னோடு பேச வேண்டும் என ஆசைப்பட்டு, அடம் பிடித்து அழுத குழந்தையின் வீடியோ வைரலானதை பார்த்து விட்டு, அவருடன் வீடியோ காலில் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் விஜய். இதை தொடர்ந்து, விஜயின் இந்த செயல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது மட்டும் இன்றி பாராட்டுக்களையும் குவித்தது.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'வாரிசு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, வசூலில் சாதனை படைத்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து, லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்னும் ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளது.
விஜய் கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில், நடித்து வருவதாகவும், இவருக்கு வில்லனாக மிஷ்கின், கெளதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை வெளியான அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக எகிறியுள்ளது