அஜித் தன்னுடைய 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளது யார்? என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஏகே 62 படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியதாக தகவல் வெளியான நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பிரபல இயக்குனர் கைப்பற்றியுள்ளது அவருக்கு அடித்த ஜாக்பாட்டாகவே பார்க்கப்படுகிறது.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'துணிவு', வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவான இந்த படத்தின், மூலம் அஜித் மக்களுக்கு தேவையான நல்ல ஒரு கருத்தை கூறியுள்ளார் என தொடர்ந்து ரசிகர்கள் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். மூன்று வாரங்களாக ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று, 300 கோடி வசூலை இப்படம் நெருங்கி வருகிறது.
Breaking: ரஜினியின் பெயர், போட்டோ, குரலை, பயன்படுத்த அதிரடி தடை! மீறினால் நடவடிக்கை..!
அஜித் தற்போது, தன்னுடைய அடுத்த படத்திற்காக தயாராகி வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. அஜித்தின் 62 ஆவது படத்தை நயன்தாராவின் காதல் கணவர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியான நிலையில், திடீரென இயக்கிய 62 படத்தின் கதை, தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தாலும், அஜித்துக்கும் கதை மீது உடன்பாடு ஏற்படுத்தாதால், இன்னும் கதையை மெருகேற்றுங்கள் என அஜித் அவருக்கு நேரம் கொடுத்துள்ளதாகவும், அதற்குள் மற்றொரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதால், அஜித்தின் 62 ஆவது படத்திற்கு பதிலாக 63 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்னேஷ் சிவன் விலகியதால் அஜித் படத்தை இயக்கம் வாய்ப்பு, விஷ்ணு வர்தனுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்தை வைத்து, விஷ்ணு வர்தன் 'பில்லா 2' படத்தை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்த நிலையில், அடுத்ததாக அஜித்தை அவித்து 'பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் தற்போது விக்னேஷ் சிவனும் வேண்டாம், விஷ்ணு வர்தனும் வேண்டாம் என முடிவு செய்து விட்ட அஜித், பிரபல இயக்குனர் மகிழ்திருமேனிக்கு ஓகே சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான, தடம், கலக தலைவன் போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அஜித்தை வைத்து அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், விரைவில் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்பது தெரியவரும், அதிகார பூர்வ தகவல் வெளியாகும் வரை கார்த்திருப்போம்.