அங்கு தனது அம்மாவுடன் சென்ற பூஜா குமார், குடும்ப உறுப்பினர்களின் குரூப் போட்டோவிலும் இடம் பிடிக்க வாய்க்கு வந்த படி நெட்டிசன்கள் வசைபாட ஆரம்பித்தனர்.
2000ம் ஆண்டு தமிழில் வெளியான “காதல் ரோஜாவே” என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா குமார். அமெரிக்காவில் வசித்து வரும் பூஜா குமார் தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவை விட்டு விலகி இருந்த பூஜா குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் ஹாசனின் “விஸ்வரூபம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் “உத்தம வில்லன்”, “விஸ்வரூபம் 2” என அடுத்தடுத்து கமலுடன் ஜோடி போட்டு நடித்தார்.
இதையும் படிங்க: பிகினி போட்டோவை வெளியிட்ட ஹன்சிகா... குஷ்பு, த்ரிஷா கமெண்ட் என்ன தெரியுமா?
படங்களில் மட்டுமே ஜோடியாக நடித்து வந்த பூஜா குமார், கமல் ஹாசனின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது அனைவரது கண்களையும் உறுத்த ஆரம்பித்தது. அதிலும் பரமக்குடியில் உள்ள கமல்ஹாசனின் பூர்வீக வீட்டிற்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்றிருந்தனர். அங்கு தனது அம்மாவுடன் சென்ற பூஜா குமார், குடும்ப உறுப்பினர்களின் குரூப் போட்டோவிலும் இடம் பிடிக்க வாய்க்கு வந்த படி நெட்டிசன்கள் வசைபாட ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க: ஜோதிகாவைத் தொடர்ந்து த்ரிஷா... முன்னணி நடிகைகளுக்கு விடாமல் கொக்கி போடும் ஓடிடி...!
இந்நிலையில் லாக்டவுனுக்கு பிறகு கமல் ஹாசன் இயக்கி நடிக்க உள்ள “தலைவன் இருக்கிறான்” படத்திலும் பூஜா குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பூஜா குமாரை சினிமாவிற்கு அழைத்து வந்ததே கமல் தான், அதனால் தான் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவைக்கிறார். கமலை தவிர யாரும் பூஜா குமாருக்கு வாய்ப்பு தரவில்லை என்று சகட்டுமேனிக்கு வதந்தி பரப்பினர்.
இதையும் படிங்க: அந்த இடத்தில் முத்தம் கேட்ட சாக்ஷி அகர்வால்... கண்டபடி திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்...!
நீண்ட நாட்களாக கோலிவுட்டிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவி வந்த இந்த வதந்தி(தீ)க்கு பூஜாகுமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பேட்டி ஒன்றில், கமல் சாரையும் அவரது குடும்பத்தினரையும் எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அதன் மூலமாகவே நான் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்தேன். கமல் ஹாசனின் அண்ணன் மற்றும் அவரது மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா ஆகியோரும் எனக்கு நல்ல பழக்கம். அதனால் தான் அவர்களுடைய குடும்ப நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்றேன். அதுமட்டுமின்றி “தலைவன் இருக்கிறான்” படத்தில் நான் நடிக்கவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.