ராகவா லாரன்ஸின் ஆசிரமத்தில் இருக்கும் 10 மாணவிகள்... 5 மாணவர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா!

By manimegalai aFirst Published May 26, 2020, 11:51 AM IST
Highlights

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இதுவரை எந்த முன்னணி நடிகரும் கொடுக்க முன் வராத பெரிய தொகையான 3 கோடி ரூபாயை நிதியாக அறிவித்தார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இதுவரை எந்த முன்னணி நடிகரும் கொடுக்க முன் வராத பெரிய தொகையான 3 கோடி ரூபாயை நிதியாக அறிவித்தார். இதை தொடர்ந்தும், நலிந்த  சினிமா கலைஞர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவிகளை அறிவித்தார். 

அதே போல் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, வேலை இல்லாமல் கஷ்டப்படும் அடித்தட்டு மக்களுக்கு தன்னுடைய நண்பர்கள் மற்றும் குழுவினருடன் சேர்ந்து, தினமும் பலருக்கு உணவு வழங்கி வருகிறார்.

நல்லது செய்து வருபவருக்கே இப்படி ஒரு சோதனையா?  என நினைக்க வைத்துள்ளது இந்த சம்பவம். ராகவா லாரன்ஸ் அசோக் நகரில்  நடத்தி வரும் ட்ரெஸ்டில் பல குழந்தைகள் தங்கி படித்து வருகிறார்கள். மேலும் இந்த ட்ரெஸ்டின் மூலம், குழந்தைகளின் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நல்ல காரியங்களுக்கு உதவி வருகிறார் ராகவா லாரன்ஸ்.

இந்நிலையில் இந்த ட்ரெஸ்டில் தங்கி இருக்கும் 10 மாணவிகள், 5  மாணவர்கள், 3 பணியாளர்கள், 2 சமையல்காரங்கள் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இவர்களை தொடர்ந்து அந்த ட்ரெஸ்டில் தங்கி இருக்கும் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா என சுகாதார துறை அதிகாரிகள் சோதனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!