தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் என்ன..? ரஜினி கொடுத்த அன்புப்பரிசு..!

Published : Jan 21, 2022, 02:01 PM IST
தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் என்ன..? ரஜினி கொடுத்த அன்புப்பரிசு..!

சுருக்கம்

சர்ச்சைக்குரிய நடிகரான பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு அனிருத் தான் காரணம் என கூறியுள்ளார். 

கடந்த சில தினங்களாக தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு விவகாரம் பேசுபொருளான நிலையில், தனுஷுக்கு ரஜினிகொடுத்த பரிசு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக கடந்த திங்கட்கிழமை இரவு அறிவித்தனர். இருவரும் சமூகவலைதளங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் பிரிவதை உறுதிப்படுத்தினர்.

அந்த அறிக்கையில் “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனுஷுக்கு ரஜினி, கொடுத்த பரிசு குறித்தும் அதன் பிறகு அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, தீவிர சிவ பக்தரான தனுஷுக்கு ருத்ராட்சம் ஒன்றை பரிசளித்தாராம் ரஜினி. அதன் பிறகு அவர் வாழ்க்கையில் நேர்மறையாக பல நல்ல மாற்றங்கள் நடந்ததாம்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் திருமணமாகி 18 வருடங்கள் ஆன பிறகு ஏன் இந்த முடிவு என கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நடிகரான பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு அனிருத் தான் காரணம் என கூறியுள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆவதற்கு முன்பாகவே ஐஸ்வர்யாவுக்கும் அனிருத்துக்கும் தொடர்பு இருந்தது என அவர் பேசியுள்ளார். இதன் காரணமாகவே தனுஷ்-அனிருத் இடையே பிரிவு ஏற்பட்டது என அவர் பேசியுள்ளார்.
 
அவருடைய இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனுஷ் திருமணத்தின்போது அணிருத் மிகவும் சின்ன பையன். அப்படி இருக்கையில் இருவருக்கும் எப்படி தொடர்பு இருக்கும்? தேவையில்லாமல் கண்டபடி பேசி விடாதீர்கள் என பயில்வான் ரங்கநாதனை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!