Mayilsamy Speech : "தாய் பால் போல மது எனக்கு" பகீர் கிளப்பிய மயில்சாமி..

Kanmani P   | Asianet News
Published : Jan 21, 2022, 01:07 PM ISTUpdated : Jan 21, 2022, 01:53 PM IST
Mayilsamy Speech : "தாய் பால் போல மது எனக்கு" பகீர் கிளப்பிய மயில்சாமி..

சுருக்கம்

mayilsamy speech : ' என்னை தாய்ப்பால் கொடுத்து தாய் எப்படி தூங்க வைத்தாளோ..அதே போல மதுதான் என்னை இன்றளவும் தூங்க வைக்கிறது ' என கூறியுள்ளார் மயில்சாமி..

மயில்சாமி தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றிலும் பங்களித்துள்ளார். நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.

1984-ல் தாவணி கனவுகள் படத்தில் கூட்டத்தில் ஒருவராக தோன்றிய மயில்சாமி பின்னர் திறமையால் பிரபல  நகைச்சுவை நடிகராக மாறினார். இவர் தற்போது சிவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாக்கி வரும் இடியட் படத்தில் கமிட் ஆகியுள்ளார்..அவ்வப்போது சமூக இன்னல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்  மயில்சாமி. 

ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்பு வரை அ.தி.மு.க-வில் இருந்த நடிகர் மயில்சாமி, ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.கவிலிருந்து ஒதுங்கி அமைதியாக இருந்தார். இதையடுத்து கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்து களத்தில் குதித்தார் மயில்சாமி. அந்த தேர்தலில் மயில்சாமிக்கு 1,435 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

இந்நிலையில் சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய மயில்சாமி.. தூக்கம் வரவில்லை என கட்டிங் அடித்துவிட்டு தூங்கியதாக பேசியிருக்கிறார். கொரோனா காலக்கட்டத்தில் 16 லட்சம் கடன் வாங்கியிருக்கிறாராம். அதனை நினைத்து சில நாட்கள் தூங்க முடியாமல் தவித்தவர், சரவணபவனின் பொங்கலும் கட்டிங்கும் சாப்பிட்டுதான் தூங்கினேன் என பெருமையாக மேடை ஒன்றில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இதேபோல முன்பு பேசிய இவர் மேலும் ' என்னை தாய்ப்பால் கொடுத்து தாய் எப்படி தூங்க வைத்தாளோ..அதே போல மதுதான் என்னை இன்றளவும் தூங்க வைக்கிறது ' என கவிதை நடையில் வேறு கூறினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!