
கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ராஜு, இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இதுதவிர விஜய் டிவி நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் பாணியாற்றி உள்ளார் ராஜு. கடைசியாக இவர் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் தான் இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. மக்களின் மனங்களை வென்ற போட்டியாளராக இருந்ததோடு மட்டுமின்றி, இறுதிப்போட்டியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வென்றும் அசத்தினார்.
பிக்பாஸ் டைட்டில் வின்னரான ராஜுவுக்கு பிக்பாஸ் லோகோவுடன் கூடிய டிராபியும், ரூ.50 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. பிக்பாஸ் டைட்டில் ஜெயித்த ராஜுவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
பிக்பாஸ் வெற்றிக்கு பின் பல்வேறு பேட்டிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட ராஜு, தற்போது சினிமாவில் நிறைய பட வாய்ப்புகள் வருவதாகவும் தெரிவித்தார். மேலும் ஒரு பேட்டியில், பிக்பாஸ் பைனல் முடிந்து டிராபி மட்டும் தான் தனது கைக்கு வந்ததாகவும், ரூ.50 லட்சம் இன்னும் தரவில்லை என்பதையும் ஓப்பனாக சொன்னார் ராஜு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.