AK Teaser : பட்டையை கிளப்பும் AK டீசர்..ஆக்சனில் அசத்தும் சந்தானத்தின் பிறந்தநாள் ஸ்பெஷல்..

Kanmani P   | Asianet News
Published : Jan 21, 2022, 01:30 PM IST
AK Teaser : பட்டையை கிளப்பும் AK டீசர்..ஆக்சனில் அசத்தும் சந்தானத்தின் பிறந்தநாள் ஸ்பெஷல்..

சுருக்கம்

AK Teaser : இன்று தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் சந்தானம்.. அவரது பிறந்தநாள் பரிசாக AK டீசர் வெளியிடப்பட்டுள்ளது..

சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளி திரையில் கலக்கி வரும் சந்தானம துணை நடிகராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். நக்கலுக்கு பெயர் போன சந்தானம் விஜய், உதயநிதி, ஆர்யா, அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களின் தோழனாக நடித்துள்ள காட்சிகள் மனதில் பதிந்தவையாகவே இருக்கும். பின்னர் கமெடியனிலிருந்து நாயனாக தன்னை திசை திருப்பிய சந்தானம் காமெடி சார்ந்த கதைகளையே தேர்ந்தெடுத்து வருகிறார்.

அந்த வகையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் முதல் சமீபத்தில் வெளியான டிக்கிலோனா வரை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவரது நடிப்பில் வந்த படங்களின் வெற்றியில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பினும் தனது பாதையை மாற்றாத நடிகர் சந்தானம் தற்போது 'சபாபதி' என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீனிவாச ராவ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படமும் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதைத்தொடர்ந்து Manoj Beedha இயக்கத்தில் தற்போது  ஏஜென்ட் கண்ணாயிரம் என்கிற படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். ஏஜென்ட் கண்ணாயிரம் 2019 தெலுங்கில் வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் அதிகாரப்பூர்வமான தமிழ் ரீமேக். தெலுங்குப் படத்தில் நவீன் பொலிஷெட்டி நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. \

சந்தானம் துப்பறியும் நிபுணராக நடிக்கும் இந்தப் படம் நகைச்சுவை கலந்த திரில்லர் கதையில் உருவாகி வருகிறது. இப்படத்தில் சந்தானத்துடன் ஊர்வசி, குக் வித் கோமாளி புகழ், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீத்தா இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் ஜனவரி 21ம் தேதியான நாளை காலை 10:15க்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.. அதன்படி இந்த டீசரை ஆர்யா, ஜீவா இருவரும் வெளியிட்டனர்.

இன்று தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் சந்தானம்.. அவரது பிறந்தநாள் பரிசாக AK டீசர் வெளியிடப்பட்டுள்ளது.. பல் போடி விளம்பரத்துடன் ஆரம்பிக்கும் டீசரில் ஓல்ட் விளம்பர ஸ்டைலில் காட்டப்படுகிறார் ஏஜென்ட் கண்ணாயிரம்.. டீசரின் மூலம் இந்த முறையும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதியாகிறது..

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!