ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பால் டப்பா எழுதி பாடிய 'மக்காமிஷி' பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன அசைவுகளை வடிவமைத்துள்ளார்
ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் 'பிரதர்'. இப்படத்தின் முதல் பாடலான 'மக்காமிஷி' தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு, லிரிக்ஸ் எழுதி பாடியுள்ளார் பால் டப்பா. 'மக்காமிஷி' என்றால் என்ன என்பது தான் தற்போது சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்து வருகிறது. அந்த கேள்விக்கு விடை என்னவென்றால் கெத்து, மாஸ், ஸ்டைல் என்று அர்த்தமாம்.
வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள 'மக்காமிஷி' பாடல் இளைஞர்களால் தற்போது vibe செய்யப்பட்டு வருகிறது. 'மக்காமிஷி' பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் மிகுந்த உற்சாகமடைந்துள்ள படக்குழ 'பிரதர்' திரைப்படத்தின் இதர பாடல்களை அடுத்தடுத்து வெளியிட தயாராகி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... KPY Bala : ஒரு கை இன்றி கஷ்டப்பட்ட மாற்றுத்திறனாளி... கடவுள் போல் வந்து நம்பிக்‘கை’ தந்த பாலா - வைரல் வீடியோ
'பிரதர்' திரைப்படத்திற்காக ஐந்து பாடல்களை ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான ஆல்பமாக இது இருக்கும் என்று அப்படத்தின் இயக்குநர் எம்.ராஜேஷ் தெரிவித்துள்ளார். 'பிகில்', 'நட்பே துணை', 'தடம்' உள்பட 25க்கும் மேற்பட்ட ஹிட் படங்களை விநியோகம் செய்து, 'தாராள பிரபு', 'சாணிக் காயிதம்', 'மத்தகம்', போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படைப்புகளை தயாரித்து தயாரிப்பிலும் முத்திரை பதித்து வரும் ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'பிரதர்' படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனமும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழும், ஓடிடி உரிமையை ஜீ5 டிஜிட்டல் தளமும் வாங்கி உள்ளன. ஒரு இளைஞன் மற்றும் அவரது சகோதரிக்கு இடையேயான பாசப்பிணைப்பை உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்லும் குடும்ப படமாக 'பிரதர்' உருவாகி இருக்கிறதாம். இது நடிகர் ஜெயம் ரவியின் 30வது படம்.
'பிரதர்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் நட்டி நட்ராஜ், பூமிகா, விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன், சீதா, தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ், சதீஷ் கிருஷ்ணன், எம் எஸ் பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 'பிரதர்' படத்தை விரைவில் வெளியிடுவதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... எங்கிட்ட 2 கார் இருந்தாலும்... என் மாமா அரசு பஸ்ல தான் போவாரு - உலுக்கிய மாமனாரின் மரணம்; கதறி அழுத சூரி